இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி இன்று மாலை கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. 


 


இந்நிலையில்  முதல் டி20 தொடரில் இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டி20 தொடரில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக விலகினர். கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் அணியில் இல்லாததால் ரோகித் சர்மாவுடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து மீண்டும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தெரிகிறது. 


 






அதேபோல் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது. சுழற்பந்துவீச்சாளராக சாஹல் இடம்பெறுவார் என்று தெரிகிறது. இவர்களுடன் சேர்ந்து தீபக் ஹூடாவும் இந்திய அணியில் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


 


முதல் டி20 போட்டிக்கான உத்தேச அணி: 


ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா/ வெங்கடேஷ் ஐயர், சாஹல், ஷர்துல் தாகூர்,புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், தீபக் சாஹர்.


 


உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவும், ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் அல்லது தீபக் ஹூடா ஆகிய இருவரில் ஒருவர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.  


முன்னதாக வெஸ்ட் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் காரணமாக வெளியேறியுள்ளார். இதன்காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக குல்தீ யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.


மேலும் படிக்க: சி.எஸ்.கே அணிக்கு தோனி வந்த கதை! - சுவாரசியத் தகவல் பகிர்ந்த வி.பி.சந்திரசேகர்