IND vs WI, 1st Test LIVE: வலுவான நிலையில் இந்திய அணி.. விக்கெட்களை எடுக்க திணறும் வெ.இண்டீஸ் பந்துவீச்சாளர்கள்!
India vs West Indies, Day 1 Live Score: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்களுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்
முகேஷ் Last Updated: 13 Jul 2023 08:04 PM
Background
IND vs WI 1st Test: வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. மொத்தம் இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது...More
IND vs WI 1st Test: வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. மொத்தம் இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி, டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது. வரும் 16ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே முகாமிட்டு, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. பேட்டிங் வரிசையில் மாற்றம்முதல் டெஸ்ட் போட்டியில், சுப்மான் கில்-லுக்கு பதிலாக யாஷ்வி ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மாவுடன் ஓப்பராக களம் இறங்க உள்ளார் என நேற்றே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். அதோடு,சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக யாஷ்வி ஜெய்ஸ்வால் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். நேருக்குநேர்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே 98 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 22 முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 30 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 46 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை விட வெற்றி அடிப்படையில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கணக்கில் கொண்டால், இந்த தொடர் முடியும் போது இரு அணிகளும் 100 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கும். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சார்ரி ஜோசப், கிர்க் மெக்மார்க்மன் ரெசிபர், கிர்க் மெக்மர் ரோச், ஜோமெல் வாரிக்கன்.வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வலுவான நிலையில் இந்திய அணி.. விக்கெட்களை எடுக்க திணறும் வெ.இண்டீஸ் பந்துவீச்சாளர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்துள்ளது.