IND Vs SL T20 LIVE: அர்ஷ்தீப், சாஹல் மிரட்டல்... இலங்கையை வீழ்த்தி தொடரை வென்று இந்தியா அசத்தல்..!
IND Vs SL T20 LIVE: இந்தியா - இலங்கை இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியை இந்திய அணி வென்று தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 11.5 ஓவர்களில் 100 ரன்கள் கடந்துள்ளது.
அவிஷ்கா பெர்னாண்டோ அவுட்! ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்தார்.
அக்சர் பட்டேலின் ஓவரின் ஐந்தாவது பந்தில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இலங்கை 44 ரன்கள் எடுத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் சதத்தால் இந்தியா அணி 229 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
18.1 வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் டி20 வடிவத்தில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார்.
தில்ஷன் மதுஷங்காவின் ஓவரின் நான்காவது பந்தில் தீபக் ஹூடா வெளியேறினார்.
டி20 வடிவத்தில் தனது முதல் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில், 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களில் அவுட்டானார்.
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்த பந்துகளை சிக்ஸர்களை பறக்கவிட இந்திய அணி 12.6 ஓவர்களில் 131 ரன்களை தொட்டது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 10.4 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
கருனாரத்னே வீசிய 6 வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட திரிபாதி, அதே ஓவரில் தில்ஷான் மதுஷங்கவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் இதுவரை சுப்மான் கில் 1 சிக்ஸர் அடித்துள்ளார். மறுமுனையில் களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார்.
தில்ஷான் மதுஷங்க வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி மூன்று பந்துகளில் 3 ரன்கள் எடுத்துள்ளது.
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஸ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்
இன்றைய ஆட்டத்தில் நடுவர்களாக ஜெயராமன் மதனகோபால் (IND), நிதின் மேனன் (IND), மூன்றாம் நடுவராக அனில் சவுத்ரி (IND) உள்ளனர்.
ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
Background
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த, டி-20 தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் இந்திய அணி களம் கண்டு வருகிறது.
தொடரை வெல்லப்போவது யார்?
மும்பையில் நடைபெற்ற தொடரின் முதல் டி-போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற இரண்டாவதுவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை உறுதி செய்யும் 3-வது கடைசி டி-20 இன்று நடைபெற உள்ளது. ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற உள்ளது போட்டி, இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரம் காட்டுவதால், போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பு ஏதும் இல்லை என உள்ளூர் வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நிலவரம்:
இந்திய அணியில் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது பலவீனமாக கருதப்படுகிறது. சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்க வேண்டி உள்ளது. பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, கடைசி போட்டியை போன்று நோ பால்களை வீசாமல் ஒழுக்கத்துடன் செயல்பட்டாலே அணியின் வெற்றிக்கு உதவ முடியும் என்பது குறிப்பிடத்தகக்து. இதனிடையே, காயம் காரணமாக, இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து, இந்திய வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதிப்பாரா பாண்ட்யா?
இந்திய டி-20 அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க இந்திய கிரிக்கெட் சம்மேளனம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கிடைக்கும் சூழல்களில், கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு திறமையை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் பாண்ட்யா இருக்கிறார். எனவே உள்நாட்டில் நடக்கும் இலங்கை உடனான இந்த தொடரை கைப்பற்றுவது பாண்ட்யாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்திய அணியின் உத்தேச வீரர்கள்: இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை அணியின் உத்தேச வீரர்கள்: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -