INDvsSA 1st Test Day 4 Live: தோல்வியை தவிர்க்க போராடி வரும் தென்.ஆப்பிரிக்கா- ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழந்து தடுமாற்றம் !

மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இந்திய அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

ABP NADU Last Updated: 29 Dec 2021 09:43 PM
4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 94/4

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 6 விக்கெட்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 

தென்னாப்பிரிக்க கேப்டன் டின் எல்கர் நிதான ஆட்டம்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 27 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை தென்னாப்பிரிக்கா எடுத்துள்ளது.  கேப்டன் டின் எல்கர் 37 ரன்களுடன் நிதானமாக ஆடி வருகிறார். 

20 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா 51/2

305 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

சிராஜ் வேகத்தில் வீழ்ந்த பீட்டர்சென்:

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. 

தேநீர் இடைவேளையின் போது தென்னாப்பிரிக்கா 22/1

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் தேநீர் இடைவேளையின் போது தென்னாப்பிரிக்கா 22 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது. 

6 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 18/1

305 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் தென்னாப்பிரிக்கா 18 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து தவித்து வருகிறது. 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 174 ரன்களுக்கு ஆல் அவுட்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி போட்டியை வெற்றி பெற 305 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ரிஷப் பண்ட் 34 ரன்களில் அவுட்

செஞ்சுரியன் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 166 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்துள்ளது. ரிஷப் பண்ட் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். 

அடுத்தடுத்து 3 விக்கெட் இழந்து தவிக்கும் இந்தியா !

விராட் கோலியை தொடர்ந்து புஜாரா,ரஹானே ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகியுள்ளனர். இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் அடித்துள்ளது. 

18 ரன்களுக்கு விராட் கோலி அவுட்:

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி 18 ரன்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்துள்ளார். 

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 79/3:

தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளின் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன் 209 ரன்கள் முன்னிலையை பெற்றுள்ளது. 

உணவு இடைவேளை - இந்தியா 79/3

ராகுலின் விக்கெட்டை தூக்கிய இங்கிடி - இறங்கிய கோலி

Background

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.


அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில், 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்து கொண்டது. அதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி, ஷமியின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மூன்றாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்ரிக்க அணி. அதனை அடுத்து, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இந்திய அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.