IND vs SA 1ST TEST DAY 3 LIVE : மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 16-1

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் லைவ் அப்டேட்களை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

முகேஷ் Last Updated: 28 Dec 2021 09:41 PM
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 16-1

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 5 ரன்களுடனும், ஷர்துல் தாக்கூர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

197 ரன்களுக்கு சுருண்ட தெ.ஆப்பிரிக்கா.! 130 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா..!

செஞ்சூரியனில் இந்தியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால், இந்திய அணி 130 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

5வது விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி..! 9வது விக்கெட்டை இழந்த தெ.ஆ...!

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையை முகமது ஷமி தனது வேகப்பந்து வீச்சால் நிலைகுலையச் செய்துள்ளார். அவரது அபாரமான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி 9வது விக்கெட்டை இழந்துள்ளது. முகமது ஷமி மட்டும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவிற்காக அரைசதம் அடித்த தெம்பா பவுமா அவுட்...! முகமது ஷமி அபாரம்..!

இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நிலையில், அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் பவுமா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால், அரைசதம் அடித்த சில நிமிடங்களிலே முகமது ஷமி பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 103 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

6வது விக்கெட்டையும் இழந்தது தென்னாப்பிரிக்கா...!

இந்தியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வரும் நிலையில் 6வது விக்கெட்டிற்கு களமிறங்கிய வியான் மல்டரும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஷமி பந்தில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

குயின்டின் டி காக் - தெம்பா பவுமா ஜோடியை பிரித்தார் ஷர்துல் தாக்கூர்

தென்னாப்பிரிக்க  அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்த நிலையில் தெம்பா பவுமாவும், குயின்டின் டி காக்கும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், ஷர்துல் தாக்கூர் இந்த ஜோடியை பிரித்தார். அவரது பந்திகல் 63 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 1 சிக்ஸ் அடித்திருந்த குயின்டின் டி காக் போல்டானார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா...!

இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுமாறி வருகின்றனர். அந்த அணி சற்றுமுன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. மார்க்ரம் 13 ரன்களுக்கும், வான்டர் டு சென் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்துள்ளனர். 

இரண்டாவது விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்கா...!

உணவு இடைவேளைக்கு பிறகு முதல் இன்னிங்சில் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது. கீகன் பீட்டர்சன் 15 ரன்களுக்கு ஷமி பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். 

தென்னாப்பிரிக்க 21 ரன்களுக்கு 1 விக்கெட்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளான இன்று முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்களை எடுத்துள்ளது. மார்க்ரம் 9 ரன்களுடனும், பீட்டர்சன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் ஓவரிலே விக்கெட் வேட்டையைத் தொடங்கிய பும்ரா...!

இந்திய அணிக்கு எதிராக தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி தொடக்கமே கேப்டன் டீன் எல்கர் விக்கெட்டை இழந்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் ஓவரிலே எல்கர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 

327 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா

இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்துள்ள முகமது சிராஜ் - ஜஸ்பிரித் பும்ரா ஜோடி  சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. ஆனாலும், இந்திய அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

8வது விக்கெட்டை இழந்தது இந்தியா..! விக்கெட் வேட்டை நடத்தும் ரபாடா..!

அஸ்வின், ரிஷப் பண்ட் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறிய இந்தியா 8வது விக்கெட்டையும் இழந்துள்ளது. ஷர்துல் தாக்கூர் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார். 

அஸ்வின், ரிஷப் பண்ட் அடுத்தடுத்து அவுட் : தடுமாறும் இந்தியா

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணி ரிஷப்பண்ட் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்துள்ளது. ரிஷப் பண்ட் 8 ரன்களுக்கும், அஸ்வின் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

'ராங்' ரஹானே 48 ரன்களின் அவுட்..

அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, லுங்கி நெகிடி வீசிய ஓவரில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து 48 ரன்களில் அவுட் ஆனார். தற்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்களை எடுத்துள்ளது. 

Background

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட் போட்டித்தொடரின் நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


  இந்திய அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களுடன் ஆடி வருகிறது. இந்திய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 123  ரன்களில் அவுட் ஆனார். ரஹானே 43 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.


 





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.