ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் ஆட்டமானது வேறு தேதிக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஐசிசி வெளியிட்ட அட்டவணையின்படி, ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 15ம் தேதி இந்தியா முழுவதும் நவராத்திரி தொடங்குவதால் அகமதாபாத்தில் நடக்கும் போட்டியை வேறு தேதிக்கு மாற்ற பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 






குஜராத் மக்களால் அன்றைய இரவுகளில் வெகுஜன மக்களால் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி விளையாடப்பட இருப்பதால், பயணத் திட்டத்தை மாற்றுமாறு பாதுகாப்பு அமைப்புகள் பிசிசிஐக்கு அறிவுறுத்தியுள்ளன. 


இதுகுறித்து பேசிய பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ எங்களிடம் வந்த அறிவுறுத்தல்களை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். இந்தியா - பாகிஸ்தான் போட்டியினை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபாத் நகருக்கு வருவார்கள். நவராத்திரி பண்டிகையும் அதே நாளில் தொடங்குவதால் பாதுகாப்பு காரணங்களால் போட்டி மாற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டது. 


இதற்கிடையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நாளை (ஜூலை27) புதுடெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் சங்கங்களுக்கு கடிதம் எழுதினார். அகமதாபாத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு கவலைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கவலை கொள்கின்றனர். புதிய தேதியை உறுதி செய்தால் தெரிவிக்கப்படும். 


தேதியை மாற்றுவதற்கும், எந்தவொரு பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதன்படி, உலகக் கோப்பையை நடத்தும் சங்கங்களின் கூட்டத்தில் பங்கேற்குமாறு இதன் மூலம் கேட்டு கொள்ளப்படுகிறீர்கள்”என்று அனைத்து மாநில சங்கங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 


தேதி மாற்றப்பட்டால் ஏற்படும் பிரச்சனைகள்:






ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் போட்டியினை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருநாட்டு ரசிகர்களும் அகமதாபாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் பல ஆயிரம் ரூபாயுக்கு புக் செய்து வருகின்றன. இதுவும் அதிக விலைக்கு செல்வதால் மருத்துவமனைகளில் உள்ள பெட்களையும் புக் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.