Rohit Sharma : சச்சினின் சாதனையை நெருங்கும் ரோகித்! தடுத்து நிறுத்துமா பாகிஸ்தான்..

பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சச்சினின் ரெக்கார்டை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது.

Continues below advertisement

இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், ரோகித் சர்மாவுக்கு  'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரின் ஒரு பெரிய சாதனையை முறியடிக்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. .

Continues below advertisement

வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் முதல் ஆட்டத்தில் 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது சாம்பியன்ஸ் டிராபி 2025 பயணத்தை அதிரடியாக தொடங்கினார்.

சச்சினின் சாதனையை நோக்கி ரோஹித் சர்மா

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தற்போது வைத்திருக்கிறார். 67 இன்னிங்ஸ்களில் 29 சிக்சர்கள் அடித்துள்ளார். 19 போட்டிகளில் 26 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா அவருக்குப் பின்னால் உள்ளார். இன்னும் நான்கு சிக்சர்கள் அடித்தால், அவர் டெண்டுல்கரை முந்தி புதிய மைல்கல்லை எட்டுவார்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் இரண்டாவது இடத்தில் உள்ளார், 269 போட்டிகளில் 338 சிக்ஸர்களுடன். 398 ஒருநாள் போட்டிகளில் 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடிக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க:ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி : ஜியோஸ்டார் ஒளிபரப்பில் இணைந்த 11 ஸ்பான்ஸர்ஷிப் நிறுவனங்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித்?

ரோஹித் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார், 19 போட்டிகளில் 51 க்கும் மேற்பட்ட சராசரியுடன் 873 ரன்கள் எடுத்துள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு சதங்கள் மற்றும் எட்டு அரை சதங்கள் அடித்துள்ளார், அதிகபட்சமாக 140 ரன்கள் எடுத்துள்ளார், இதை 2019 நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையின் போது அவர் அடித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த அதிக சிக்ஸர்கள் இந்திய வீரர்கள் (ஒருநாள் போட்டிகள்)

சச்சின் டெண்டுல்கர் – 29

ரோஹித் சர்மா – 26

எம்.எஸ். தோனி – 25

யுவராஜ் சிங் – 22

வீரேந்தர் சேவாக் - 20

இதையும் படிங்க: IND Vs PAK : அசத்தும் பாகிஸ்தான், பழிவாங்குமா இந்தியா? போட்டி நேரம், நேரலை, துபாய் மைதானம் யாருக்கு சாதகம், வரலாறு எப்படி?

பாகிஸ்தானுக்கு வாழ்வா சாவா போட்டி:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பாகிஸ்தானுக்கு அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காராக இருந்த ஃபக்கர் ஜமான் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி ஏறக்குறைய தகுதி பெற்றுவிடும். 

இந்தியா vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 23(நாளை) ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும்.

Continues below advertisement