ஆசிய கோப்பைத் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு ஆளாக்கியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.


இன்றைக்கு சவால்


இந்த போட்டிக்காக இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில், இந்திய கேப்டன் ரோகித்சர்மா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, இந்த ஆசிய கோப்பையில் 6 கடுமையான அணிகள் ஆடுகிறோம்.  யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம். இந்த போட்டி பற்றி மக்கள் பேசுகின்றனர். ஒரு அணியாக நாங்கள் என்ன பார்க்கிறோம் என்றால் நாங்கள் விளையாட ஒரு எதிரணி உள்ளனர், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கிறோம்.


களத்தில் செய்யும் சரியான விஷயங்களே நமக்கு உதவப்போகிறது. சமீபகாலமாக பாகிஸ்தான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகின்றனர். அவர்கள் நம்பர் 1 இடத்திற்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். நமக்கு நல்ல சவால் உள்ளது.”


இவ்வாறு அவர் கூறினார்.


மழைக்கு வாய்ப்பு:


பாகிஸ்தான் அணி சமீபத்தில் ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த நிலையில், ஆசிய கோப்பைத் தொடரில் களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் நேபாளத்தை துவம்சம் செய்த பாகிஸ்தான் அணி இந்தியாவுடனான மோதலுக்காக காத்திருக்கிறது. இன்றுய போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தாலும் போட்டி நடக்குமா? நடக்காதா? என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.


ஏனென்றால், போட்டி நடக்கும் இலங்கையில் பல்லேகேலே மைதானத்தில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதால் போட்டி நடப்பது சந்தேகமாகவே உள்ளது. இரு அணிகளைப் பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங்கில் சம பலத்துடன் உள்ளனர்.


இந்திய அணியில் விராட்கோலி, ரோகித், சுப்மன், சூர்யகுமார் யாதவ், சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா என பேட்டிங் பட்டாளம் உள்ளது. அந்த அணியிலும் பாபர் அசாம், ரிஸ்வான், இப்திகார், இமாம் உல் ஹக், பக்கர் ஜமான் என பெரிய பட்டாளம் உள்ளது. பந்துவீச்சில் ஷாகின், நசீம்ஷா, ஹாரிஸ் ராஃப் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியிலும் பும்ரா, சிராஜ், ஜடேஜா என பெரிய பட்டாளமே உள்ளனர்.


இன்றுய போட்டி மழையால் பாதிக்கப்படாமல் முழுமையாக நடந்தால் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.


மேலும் படிக்க: BAN vs SL Match Highlights: வங்காள தேசத்தை வீழ்த்தி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இலங்கை; 11 ஒருநாள் போட்டிகளில் தொடர் வெற்றி


மேலும் படிக்க: BCCI Media Rights: ஸ்டார் ஸ்போர்ட்ஸின் 11 ஆண்டு கால சாம்ராஜ்ஜியத்தை உடைத்த ’வயாகாம்’: ஒளிபரப்பு உரிமத்தை பெற்று அசத்தல்