IND vs NZ TEST DAY 3 LIVE: ஆதிக்கம் செலுத்திய இந்தியா ; இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்தில் இந்தியா 14/1
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து, 96 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சிற்கு நியூசிலாந்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். சற்றுமுன்வரை நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் சிறப்பாக ஆடிவந்த நியூசிலாந்து தொடக்க வீரர் டாம் லாதம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 95 ரன்களில் அக்ஷர் படேல் பந்ததில் சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்ய ஆசைப்படடு விக்கெட் கீப்பர் பரத்தால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அவர் 282 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 95 ரன்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
இந்திய வீரர் அக்ஷர் படேல் தனது சிறப்பான பந்துவீச்சு மூலமாக நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோலஸை 2 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக்கி வெளியேற்றினார்.
நியூசிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் 11 ரன்களில் அக்ஷர் படேல் பந்தில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணியின் கேப்டனும், அபாயகரமான பேட்ஸ்மேனுமாகிய வில்லியம்சன் 64 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ்யாதவ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
இந்தியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சை ஆடி வரும் நியூசிலாந்து 81.4 ஓவர்களில் 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்களை குவித்துள்ளது. டாம் லாதம் 78 ரன்களுடனும், வில்லியம்சன் 17 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
இந்திய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் 214 பந்தில் 89 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிற்கு பதிலாக விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் களமிறங்கியுள்ளார்.
Background
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று நியூசிலாந்து அணி நேற்றைய ஸ்கோரான விக்கெட் இழப்பின்றி 129 ரன்களுடன் தொடர்ந்து ஆடி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -