INDvsNZ 2nd Test Day 3 LIVE : தோல்வியை தவிர்க்குமா நியூசிலாந்து : 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்
இரண்டாவது நாள் ஆட்ட நேரமுடிவில் 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்தது.
540 ரன்கள் என்ற இலக்குடன் ஆடி வரும் நியூசிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் அக்ஷர் படேல் பந்தில் 60 ரன்களில் ஜெயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டெல் ரன் ஏதுமின்றி ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால், நியூசிலாந்து அணி 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியாவிற்கு எதிராக இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக ஆடி வரும் டேரில் மிட்செல் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்துள்ளார். நியூசிலாந்து அணியும் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை கடந்து ஆடி வருகிறது.
இந்திய அணி நிர்ணயித்த 539 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசிலாந்து அணி வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க போராடி வருகிறது. அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் மூன்று விழுந்த நிலையில், அந்த அணியின் டேரில் மிட்செல் 38 ரன்களுடனும், ஹென்றி நிகோலஸ் 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
இந்தியாவிற்கு எதிராக இமாலய இலக்கை நோக்கி களமிறங்கி ஆடி வரும் நியூசிலாந்து அணி வில் யங் 20 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் டெய்லர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி நிர்ணயித்த 541 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமாகிய டாம் லாதம் அஸ்வின் பந்தில் 6 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது 2 வது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.
ரவீந்திரா பந்துவீச்சில் சஹா 13 ரன்களில் வெளியேறினார்.
கில் விக்கெட் இழப்பிற்கு பிறகு களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர், தொடக்கம் முதலே அதிரடியில் ஈடுபட்டார். சோமர்வில் வீசிய ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட ஷ்ரேயாஸ், அஜாஸ் வீசிய அடுத்த ஓவரில் 14 ரன்களில் டாம் பெலன்டனிடம் ஸ்டம்பிங் ஆனார். அதனை தொடர்ந்து, ரவீந்திரா பந்தில் கேப்டன் விராட் கோலி 36 ரன்களில் அவுட் ஆனார்.
சூப்பராக விளையாடிய சுப்மன் கில் 47 ரன்களில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் நியூசிலாந்து கேப்டன் லதமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்திய அணி 59.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணி 51 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 24 ரன்களுடனும். சுப்மன் கில் 31 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது இன்னிங்ஸில் இந்திய அணி 432 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
மதிய நேர உணவு இடைவேளையில் இந்திய அணி 46 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 11 ரன்களுடனும். சுப்மன் கில் 17 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அரைசதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 47 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அஜாஸ் படேல் தொடர்ந்து தனது சூழல் மூலம் புஜாராவை அவுட்டாகி வெளியேறினார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த மயங்க் அகர்வால், அஜாஸ் பட்டேல் சுழலில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து 62 ரன்களில் வெளியேறினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் தனது 5 அரைசதத்தை அடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் எடுத்துள்ளது.
Background
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வரும் நியூசிலாந்து அணி டி20 தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் நிதானமான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி விக்கெட்டை இழக்காமல் ஆடி போட்டியை போராடி டிரா செய்தது.
இந்த நிலையில், இந்த தொடரின் கடைசி போட்டியான இந்தியா- நியூசிலாந்து மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று முன் தினம் தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 62 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 8 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது நாள் ஆட்ட நேரமுடிவில் 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -