INDvsNZ 2nd Test Day 2 LIVE : புஜாரா - மயங்க் அதிரடி தொடக்கம்...! 332 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா...!
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 221 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தின் அஜாஸ் படேல் முதல் நாள் ஆட்டத்தில் சரிந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
263 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடி வரும் இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலும், புஜாராவும் அதிரடியாக ஆடி வருகின்றனர். இதனால், இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 29 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
நியூசிலாந்தை 62 ரன்களில் சுருட்டி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வரும் இந்தியாவின் மயங்க் அகர்வாலும், புஜாராவும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து வருகின்றனர். இருவரும் இணைந்து சற்றுமுன் வரை விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எடுத்துள்ளனர்.
நியூசிலாந்தை முதல் இன்னிங்சில் 62 ரன்களில் சுருட்டிய இந்தியா, பாலோ ஆன் அளிக்காமல் 263 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறார். புஜாராவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கியுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் தனது ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால், நியூசிலாந்து அணி 54 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் தடுமாறி வரும் நியூசிலாந்து அணி 6வது விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியாவின் வெற்றியை கடந்த போட்டியில் தடுத்த ரச்சின் ரவீந்திரா ஜெயந்த் யாதவ் பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில், விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நியூசிலாந்து அணி 5வது விக்கெட்டை இழந்துள்ளது. அஸ்வின் சுழலில் ஹென்றி நிகோலஸ் 7 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.
அக்சர் பட்டேல் வீசிய 9 வது ஓவரில் மிட்செல் 8 ரன்களில் வெளியேறினார்.
தடுமாறும் நியூசி, 17 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு... சூறாவளியான சிராஜ்...
முகமது சிராஜ் வீசிய அதே ஓவரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் லதாம் 10 ரன்களில் ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்சானார்.
இந்தியாவிற்கு எதிரான முதல் இன்னிங்சில் நியூசி, 3.1 ஓவர் முடிவில் 10/1. வில் யங் 9 பந்துகளில் 4 ரன்களுக்கு முகமது சிராஜ் பந்து வீச்சில் இந்தியன் கேப்டன் விராட் காளியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
Background
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வரும் நியூசிலாந்து அணி டி20 தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் நிதானமான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி விக்கெட்டை இழக்காமல் ஆடி போட்டியை போராடி டிரா செய்தது.
இந்த நிலையில், இந்த தொடரின் கடைசி போட்டியான இந்தியா- நியூசிலாந்து மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தொடங்கினார். மயங்க் அகவர்வாலின் சதம், கில்லின் 40+ ரன்களால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 221 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தின் அஜாஸ் படேல் முதல் நாள் ஆட்டத்தில் சரிந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -