INDvsNZ 2nd Test Day 1 LIVE : மயங்க் அகர்வால் சதத்தால் நல்ல நிலையில் இந்தியா...! முதல் நாள் முடிவில் 221-4
கடந்த சில நாட்களாக மும்பையில் மழை பெய்து வருவதால் இந்தியா-நியூசிலாந்து அணியின் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்யவில்லை.
நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளான இன்று இந்திய அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வாலின் 120 ரன்களுடன், விருத்திமான் சஹா 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடி வரும் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்துள்ளார்.
கான்பூர் டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்சில் 41 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் படேல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வரும் மயங்க் அகர்வால் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிவருகிறார்.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்திருக்கிறது
12 ஓவர் முடிவில், விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய அணி
மயாங்க் அகவர்வாலும், கில்லும் ஓப்பனிங் களமிறங்கியுள்ளனர். 3 ஓவர்கள் முடிவில் 16/0
Background
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வரும் நியூசிலாந்து அணி டி20 தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் நிதானமான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி விக்கெட்டை இழக்காமல் ஆடி போட்டியை போராடி டிரா செய்தது.
இந்த நிலையில், இந்த தொடரின் கடைசி போட்டியான இந்தியா- நியூசிலாந்து மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மும்பையில் தொடங்க உள்ளது. நியூசிலாந்து அணியில் கடந்த டெஸ்ட் மூலம் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார். இன்று தொடங்க உள்ள டெஸ்ட் போட்டி மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்ப உள்ளார். இதன்மூலம் இந்திய அணி மேலும் உற்சாகம் அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மும்பையில் மழை பெய்து வருவதால் இந்தியா-நியூசிலாந்து அணியின் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்யவில்லை. நேற்று இரவு மழை ஒரளவு குறைந்தபோது, வீரர்கள் உள்ளேயே பயிற்சி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -