IND vs NZ 1ST TEST DAY 5 LIVE : கடைசி வரை பரபரப்பு! வெளிச்சமின்மையால் டிராவில் முடிந்த கான்பூர் டெஸ்ட்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்டின் அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்து வந்த நியூசிலாந்து தொடக்க வீரர் டாம் லாதம் அஸ்வின் பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். இதனால், இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். லாதம் 146 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய டாம் லாதம் இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார்.
உணவு இடைவேளைக்கு வில்லியம் சோமர்வில்லே விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து அணி தற்போது 100 ரன்களை கடந்துள்ளது. வில்லியம்சன் 8 ரன்களுடனும், டாம் லாதம் 49 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
உணவு இடைவேளைக்கு வில்லியம் சோமர்வில்லே விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து அணி தற்போது 100 ரன்களை கடந்துள்ளது. வில்லியம்சன் 8 ரன்களுடனும், டாம் லாதம் 49 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிற்கு கழுத்துப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, அவருக்கு பதிலாக கே.எஸ்.பரத் கீப்பிங் செய்து வருகிறார்.
284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி நாளில் ஆடி வரும் நியூசிலாந்து அணியின் டாம் லாதமும், வில்லியம் சோமர்வில்லேவும் மிகவும் நிதானமாக ஆடி வருகின்றனர்.
Background
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 284 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இலக்கை நோக்கிய இறங்கிய நியூசிலாந்து நேற்று முதல் விக்கெட்டை இழந்தது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகளும், நியூசிலாந்தின் வெற்றிக்கு 280 ரன்களும் தேவைப்படுகிறது. இதனால், ஆட்டத்தின் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -