ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்தியா-நெதர்லாந்து இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்களைக் குவித்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து விளையாடவுள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் 9 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.
பின்னர், கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினர். ரோகித் சர்மா 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் விளாசினார்.
முன்னாள் கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அருமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்களில் 179 ரன்களை குவித்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து விளையாடியது.
அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 1 ரன்னிலும், மேக்ஸ் ஓதெளத் 16 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அடுத்த வந்த பாஸ் டி லீடே, காலின் அக்கர்மேன் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டிம் பிரிங்கில் மட்டும் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
இவ்வாறாக அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் 9 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.
ஆட்டநாயகனான சூர்யகுமார் யாதவ்
பின்னர், கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினர். ரோகித் சர்மா 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் விளாசினார்.
முன்னாள் கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அருமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை குவித்தது. இதையடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறி வந்தது. இறுதியில் தோல்வியைத் தழுவியது.
ஆட்டநாயகனாக 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் இந்தியா அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்தியா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அசத்தலாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின்னர் வந்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி அசத்தியுள்ளார்.