19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.


தென் ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூமில் உள்ள மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது.


முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான முதல் டி-20 உலகக்கோப்பை தொடரில், 16 அணிகள் பங்கேற்றன. தென்னாப்ரிக்காவில் கடந்த 14 ஆம் தேதியில் இருந்து  நடைபெற்று வரும் இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.


முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வென்று இங்கிலாந்தும், நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 


மிரட்டிய இந்திய அணி பந்துவீச்சாளர்கள்:


இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர். அது, இந்த போட்டியிலும் எதிரொலித்தது.


இங்கிலாந்துக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே இங்கிலாந்து விக்கெட்டை பறிகொடுத்தது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியினர் சரியான இடைவெளியில் விக்கெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றினர். 17ஆவது ஓவரில், 68 ரன்கள் எடுத்திருக்கையில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து ஆல் அவுட்டானது. 


இதையடுத்து, 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியுள்ளது.


அரையிறுதி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை வெறும் 96 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருட்டி இருந்தது. ஹன்னா பேக்கர் நான்கு ஓவர்களில் 3/10 என்ற அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதே நேரத்தில் கேப்டன் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் 3.4 ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பேட்டிங்கிலும் அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருந்தனர். 


 






ஆனால், இன்றைய போட்டியில், இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 


பர்ஷவி சோப்ரா அரையிறுதியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில்,  கேப்டன் ஷஃபாலி வர்மா எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார். தொடக்க வீராங்கனையான ஸ்வேதா செஹ்ராவத்தின் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளார். அநாவசிய தவறுகள் எதையும் செய்யாமால், இந்திய அணி தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.





இந்த கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால் டி20 மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய பெருமை இந்தியாவிற்கு சேரும்.