இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.


இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


அந்த வகையில் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் ரசிகர்கள். இச்சூழலில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்படப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதற்கான முக்கிய காரணம் ரிஷப் பண்ட் காயத்தில் இருப்பதும், இஷான் கிசான் சமீப காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருப்பதும் தான்.  அதேநேரம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே.எல்.ராகுல் இந்த முறையும் விக்கெட் கீப்பராக செயல்படுவார என்ற கேள்வியும் எழுந்தது.


கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படமாட்டார்:


இந்நிலையில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படப்போவதில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்த தொடரில் கே.எல்.ராகுல்  விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அந்த இடத்துக்கான தேர்வில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அந்த சூழ்நிலையில் எங்களின் தேர்வுக்கு மேலும்விக்கெட கீப்பர்கள் தயாராக இருக்கின்றனர். கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் ராகுல் மிகச் சிறப்பான வேலையை செய்து தொடரை சமன் செய்வதில் முக்கிய பங்காற்றினார்.


ஆனால் இந்தியாவில் இருக்கும் சூழ்நிலைகளில் நடைபெறும் இந்த ஐந்து போட்டிகளை கருத்தில் கொள்ளும் போது கீப்பருக்கான வாய்ப்பு மற்ற இரண்டு வீரர்களுக்கே கொடுக்கப்படும். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் மைதானங்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் துல்லியமாக பந்து வீசுவார்கள் அப்போது சரியாக ஸ்டம்பிங் செய்வதற்கு முழுமையான விக்கெட் கீப்பர் அவசியம்என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: IND vs ENG: ஷார்ட் பந்தில் இரையாகும் ஷ்ரேயாஸ் ஐயர்! இங்கிலாந்துக்கு எதிராக சரி செய்வாரா?


 


மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் படைக்க இருக்கும் சாதனை! விவரம் உள்ளே!