IND vs ENG Score LIVE: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி..!
டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்குநேர் மோத இருக்கின்றனர்.
அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக தொடரை விட்டு வெளியேறியது.
இங்கிலாந்து அணி 11 ஓவர்களில் 108 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது.
ஜோஸ் பட்லர் - ஹேல்ஸ் அதிரடியால் இங்கிலாந்து அணி 8 ஓவர்களில் 84 ரன்களை விளாசியுள்ளது. அந்த அணி தொடக்க வீரர் ஹேல்ஸ் 50 ரன்களை அடித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக 169 ரன்கள் இலக்குடன் களமிறங்கியிருக்கும் இங்கிலாந்து 5 ஓவர்களில் 52 ரன்களை விளாசியுள்ளது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் - ஹேல்ஸ் அதிரடியாக ஆடி வருகின்றனர். 3 ஓவர்களில் 33 ரன்களை இங்கிலாந்து எடுத்துள்ளது.
ஹர்திக்பாண்ட்யா மிரட்டல் பேட்டிங்கால் இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்களை விளாசியுள்ளது.
ஹர்திக் பாண்ட்யாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 150 ரன்களை கடந்தது.
அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய விராட்கோலி 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கிறிஸ் ஜோர்டன் பந்தில் ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி டி20 போட்டியில் 4 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 83 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்திய கேப்டன் ரோகித்சர்மா 27 ரன்கள் எடுத்த நிலையில் ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.
சாம் கர்ரன் வீசிய 5 வது ஓவரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விரட்டினார்.
கிறிஸ் வோக்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இரண்டு ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் போட்ட முதல் பந்தே இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் பெளண்டரிக்கு விரட்டினார்.
அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர் (கேப்டன்)(விக்கெட் கீப்பர்), பி சால்ட், எச் புரூக், எல் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் குர்ரன், அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோர்டான்
இந்தியா லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அக்சார் பட்டேல், ரவிசந்திர அஷ்வின், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
டி20 உலகக் கோப்பை இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
கேஎல் ராகுல்,ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்/தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல்/சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
Background
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலககோப்பை டி20 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இன்று நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வருகிற ஞாயிற்றுகிழமை பாகிஸ்தான் அணியுடன் மோதும். இங்கிலாந்து இடையிலான இன்றைய போட்டியில் இந்தியா அணி வெற்றிபெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் சந்திக்கும்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி புகழ்பெற்ற அடிலெய்டு மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டர் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 246 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் 225 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மேலும், கேஎல் ராகுல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் பார்முக்கு திரும்பினார். அதேபோல், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளாக ஜொபிக்கவில்லை. இன்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா ஜொலிக்கும் பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெறும்.
அடிலெய்டு ஓவல் ஆடுகளம் மெதுவான பந்துவீச்சாளர்களுக்கு உதவுவதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தேர்ந்தெடுக்கப்படலாம். டி20 உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டதிறனும், ஃபார்மும் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ரிஷப் பண்ட் இன்றைய போட்டியிலும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சிலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ஹெட் டூ ஹெட் :
இந்தியா - இங்கிலாந்து அணிகள் 22 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், இந்தியா 12 போட்டிகளிலும், இங்கிலாந்து 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அடிலெய்டு ஓவல் மைதானம்:
அடிலெய்டு ஓவல் மேற்பரப்பு சிறந்த பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகளமாக கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் மொத்தம் 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அடிலெய்ட் மைதானத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக 233 ரன்களை குவித்துள்ளது. குறைந்தபட்சமாக ஜிம்பாப்வே அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 117 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 158 ரன்களை சேஸ் செய்ததே அதிகபட்ச ரன்னாகும்.
இந்தியா vs இங்கிலாந்து வானிலை: 54% ஈரப்பதம் மற்றும் 19 km/hr காற்றின் வேகத்துடன் போட்டி நாளில் வெப்பநிலை 21°C ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்டத்தின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை.
கணிக்கப்பட்ட இந்திய அணி:
கேஎல் ராகுல்,ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்/தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல்/சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி:
அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -