IND vs ENG : ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அசத்தல்..! 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

IND vs ENG : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Continues below advertisement

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் சவுதாம்ப்டன் நகரில் நேற்று இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 198 ரன்கள் குவித்தது.

Continues below advertisement

இதையடுத்து, 199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரிலே கேப்டன் ஜோஸ் பட்லரை புவனேஸ்குமார் போல்டாக்கினார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய டேவிட் மலான் அதிரடியாக ஆடினார். அவர் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசினார். 21 ரன்கள் எடுத்த டேவிட் மலான் ஹர்திக் பாண்ட்யா பந்தில் போல்டாகினார்.

அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டன் ஹர்திக் பாண்ட்யா பந்தில் டக் அவுட்டாகினார். தொடக்கம் முதலே தடுமாறி வந்த ஜேசன்ராய் அணியின் ஸ்கோர் 33 ரன்களாக இருந்தபோது 16 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹார்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானார். 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த தடுமாறிய இங்கிலாந்து அணிக்கு ஹாரிப்ரூக் மற்றும் மொயின் அலி அணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மொயின் அலி அதிரடியாக ஆடினார். அவருக்கு ஒத்துழைப்ப தந்த ஹாரி ப்ரூக் 23 பந்தில் 2 பவுண்டரியுடன் 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து அந்த அணியில் ஆல்ரவுண்டர் சாம்கரன் களமிறங்கினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மொயின் அலி ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 36 ரன்கள் விளாசிய மொயின் அலி சுழற்பந்துவீச்சாளர் சாஹல் அவுட்டாக்கினார்.

சாம்கரண் 4 ரன்களில் ஆட்டமிழக்க, டெயிலண்டராக களமிறங்கிய கிறிஸ் ஜோர்டன் அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் 51 ரன்கள் வீசி அசத்திய ஹர்திக்பாண்ட்யா 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப்சிங் , சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஹர்திக்பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola