IND vs BAN ODI Score Live: வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
IND vs BAN ODI Score Live: டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளதால், இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.
410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 182 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 28 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 107 ரன்களுடன் தடுமாறி வருகிறது. அனுபவ வீரர் ஷகிப் அல் ஹாசன் மட்டும் 36 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 11 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.
ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
வங்கதேச அணிக்கு எதிராக 91 பந்துகளில் 113 ரன்கள் குவித்த விராட் கோலி, ஷகிப் வீசிய 42வது ஓவரில் 113 ரன்கள் அடித்து மெகிடி ஹாசனிடம் கேட்சானார். அதேபோல், கேஎல் ராகுல் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார்.
அதிரடியாக ஆடிவந்த இஷான் கிஷன் 131 பந்தில், 210 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தினை இரட்டைச் சதமாக அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.
இஷான் கிசன் இதுவரை 17 ஃபோர் மற்றும் 8 சிக்ஸர் விளாசி 107 பந்தில் 159 ரன்கள் குவித்துள்ளார்.
அதிரடியாக ஆடிவரும் இஷான் கிஷன் 150 ரன்களைக் கடந்து பந்துகளை நாலாபுறமும் விளாசி வருகிறார். விராட் கோலி அரைசதம் அடித்து, இஷான் கிஷனுக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் அபாரமாக ஆடி 100 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.
விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 89 பந்தில் 101ரன்களை சேர்த்துள்ளது.
19 ஓவரில் விராட் அடித்த பந்து மிட் ஆஃப் திசையில்ன் நின்று கொண்டு இருந்த லிட்டன் தாஸிடம் செல்ல, அவர் பந்தை பிடிக்கும் முன்னரே பிட்ச் ஆகிவிட்டதால், மீண்டும் தப்பித்துள்ளார். விராட் தற்போது 34 பந்தில் 23 ரன்கள் சேர்த்துள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிறகு 103 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
15 ஓவரில் இந்திய அணி 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு 85 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 59 பந்தில் 59 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக விளையாடிவரும் இஷான் கிஷன் 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இவர் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் பறக்கவிட்டுள்ளார்.
பேட்டுக்கு வரும் பந்துகளை மட்டும் அடித்து மிகவும் நிலையான ஆட்டத்தினை இஷான் கிஷன் வெளிப்படுத்திவருகிறார். தற்போது இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 67 ரன்கள் எடுத்துள்ளது.
அணியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நிதானமாக விளையாடிவருகிறார் இஷான் கிஷன். இவர் இதுவரை 31 பந்தில் 5 பவுண்ட்ரி உட்பட 30 ரன்கள் எடுத்துள்ளார்.
போட்டியின் 7வது ஓவரில் விராட் கோலி அடித்த பந்தினை ஷாட் மிட் விக்கெட் திசையில் நின்ற லிட்டன் தாஸ் தவறவிட்டார்.
போட்டியின் 5வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஷிகர் தவான் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். தற்போது விராட் கோலி களம் இறங்கியுள்ளார்.
போட்டியின் முதல் பவுண்டரியை இந்திய அணியின் இஷான் கிஷான் பந்தை ஃபோருக்கு விரட்டியுள்ளார்.
மூன்றாவது ஒருநாள் போட்டியின் இந்திய அணியின் இன்னிங்ஸை இடது கை பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன் மற்றும் ஷிகர் தவான் நிதானமாக தொடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு போட்டிகளில் களமிறக்கப்படாத இஷான் கிஷன் இந்த போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பவுலிங் செய்ய தேர்வு செய்துள்ளது. இதனால், இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.
Background
IND vs BNG: இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆறுதல் வெற்றி கிட்டுமா..?
இந்திய அணி வங்காள தேசத்துக்கு பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டது. இதில் ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு ஒருநாள் போட்டியிலும், வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரை வென்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று ஆறுதல் வெற்றியைப் பெறுமா? என ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர்.
முதல் போட்டியில் இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி, இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்கதேச அணி மூன்றாவது போட்டியையையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தோற்றால் தொடரை முழுமையாக இழந்து, ஒயிட்-வாஷ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் இல்லை
இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு இரண்டாவது போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய இந்திய அணியின் கேப்டன், மீண்டும் பேட்டிங்கின் போது களமிறங்கி, அதிரடியாக அரைசதம் விளாச்சினார். ரோகித் ஷர்மா நேற்று சிகிச்சைகாக மும்பை வந்தடைந்தார். இரண்டாவது போட்டியை வழிநடத்திய துணை கேப்டன் கே.எல். ராகுல் இந்த போட்டியை வழிநடத்தவுள்ளார்.
இந்திய அணி:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்
வங்கதேச அணி: அனாமுல் ஹக், லிட்டன் தாஸ் (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், எபடோட் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது
இந்த போட்டியானது, ஜஹூர் அகமத் சவுத்ரி மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியை சோனி லைவ் சேனலிஉல் நேரடியாக காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -