வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் எனவும், முதல் போட்டியில் சரியாக ஆடாத வீரர்களுக்கு பதிலாக இரண்டாவது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. முதல் போட்டியில் கே.எல்.ராகுல் சரியாக விளையாடவில்லை. அவரது டெஸ்ட் போட்டி பேட்டிங் சராசரி மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது. இந்நிலையில், அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் எனக் கூறப்பட்டது.
இச்சூழலில், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கே.எல்.ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகிய இருவருமே உத்தேச அணியில் இடம் பெற்று உள்ளனர்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video: "கடவுளே அஜித்தே" சேப்பாக்கம் மைதானத்தை அதிரவிட்ட ரசிகர்கள் - நீங்களே பாருங்க!