சென்னையில் இந்தியா – வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது கடைசியாக இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது.

கடவுளே அஜித்தே:


நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் நடைபெற்ற சர்வதேச போட்டி என்பதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் குவிந்தனர். போட்டியின் 3வது நாளான நேற்று போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.


அப்போது, ரசிகர்களில் சிலர் கடவுளே அஜித் என்று கோஷமிட்டனர். ஒருவர் கடவுளே என கோஷமிட ரசிகர்கள் பலரும் அஜித்தே என்று கோஷமிட்டனர். மைதானத்தின் பல இடங்களிலும் கடவுளே அஜித்தே கோஷம் ரசிகர்களால் எழுப்பப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் திரையுலகின் முன்னணி உச்சநட்சத்திரமாக உலா வரும் நடிகர் அஜித்திற்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது துணிவு படத்திற்கு பிறகு கடந்த ஒரு வருடமாக எந்த படமும் வெளியாகாமல் உள்ள நிலையில், விடாமுயற்சி படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.







சேப்பாக்கத்தில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்:


சமீபத்தில் நடிகர் விஜய்யின் கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற தல வசனம் அஜித்தை குறிப்பிட்டா? அல்லது தோனியை குறிப்பிட்டா? என்று பெரும் சர்ச்சை எழுந்தது. சி.எஸ்.கே. நிர்வாகம் தங்களது எக்ஸ் பக்கத்தில் கோட் படத்தில் இடம்பெற்ற யாரோட பேன் நீ என்ற வாசகத்துடன் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது. இதை கோட் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் ரீ ட்வீட் செய்யவும் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.






இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, படத்தின் இயக்குனர் தான் தல என்று குறிப்பிட்டதை நடிகர் அஜித்தையே என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்த சூழலில், சென்னை சேப்பாக்கம்  மைதானத்தில் ரசிகர்கள் பலரும் கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டுள்ளனர்.


அஜித்தின் விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, குட்பேட் அக்லி படமும் அடுத்தாண்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.