IND vs BAN LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்.. ரன் எடுக்க முடியாமல் வங்கதேச அணி திணறல்!
இந்தியா மற்றும் வங்கதேசம் மோதும் போட்டியின் நேரலையை இங்கே பார்ப்போம்..
ரிஷாத் ஹொசைன் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார் ஷகிப் அல் ஹசன்
13 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச வீரர் டவ்ஹித் ஹ்ரிடோய் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேசம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.
31 பந்துகள் களத்தில் நின்ற தன்ஷித் ஹசன் 29 ரன்கள் மட்டுமே எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் 47 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேசம் அணி.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வங்கதேச அணி 27 ரன்கள் எடுத்துள்ளது.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 11 ரன்கள் எடுத்துள்ளது.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் 178 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி வீரர் ஷிவம் துபே 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 146 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பண்ட் 36 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த விராட் கோலி 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவருக்கு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களுக்கு அவுட்டானார்.
டி20 உலகக்கோப்பையில் மட்டும் விராட் கோலி 3 ஆயிரம் ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.
இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 56 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
விராட் கோலி - ரிஷப் பண்ட் ஜோடி நிதானமாக ஆடி வருகின்றனர். இதனால், இந்திய அணி 50 ரன்களை கடந்தது.
4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 39 ரன்கள் எடுத்துள்ளது.
3.4 ஓவரில் கேட்சை கொடுத்து அவுட்டானார் ரோகித் சர்மா
இரண்டு ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் ஓவர் முடிந்த நிலையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியுள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி உள்ளனர்.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
டி20 உலகக் கோப்பை 2024:
ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்ற நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. அவை குரூப்-1 மற்றும் குரூப் 2 என பிரிக்கப்பட்டு தற்போது போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
பலம் - பலவீனம்:
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி, ஆண்டிகுவா & பார்புடாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி விளையாடியுள்ள ஒரு போட்டியில் வெற்றியையும், வங்கதேச அணி ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
இந்திய அணி சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
அதேநேரம், மிகவும் எதிர்பர்க்கப்படும் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இனி வரும் போட்டிகள் மேலும் மேலும் கடினமாக இருக்கும் என்பதால், இந்த இரண்டு வீரர்களும் ரன் குவிப்பது இந்திய அணிக்கு அவசியமாகும். ஷிவம் துபேவும் இதுவரை ஒரு போட்டியில் கூட ஜொலிக்கவில்லை. பந்துவீச்சு தான் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய பலமாக உள்ளது. சில போட்டிகளில் பேட்டிங் மொத்தமாக சொதப்பினாலும் கூட, பவுலிங் யூனிட் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. இதே ஃபார்மை தொடர்ந்தால் இன்றைய போட்டியிலும் இந்திய அணியால் வெற்றி பெறமுடியும்.
வங்கதேச அணியை பொறுத்தமட்டில், நடப்பு உலகக் கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஓரளவிற்கு சுமாராகவே செயல்பட்டு வருகிறது. அதேநேரம் இந்தியாவுடன் பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் இன்றைய போட்டியில் அவர்களுக்கு உதலாம். எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, ஒட்டுமொத்த கூட்டு முயற்சியை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
இன்றய போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி அரையிறுதிக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 12 முறையும், வங்கதேசம் அணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -