Rohit Sharma Records: ஹிட்மேன்னா சும்மாவா.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி.. மன்னனாக மாறிய ரோஹித் ஷர்மா!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 சிக்ஸர்களை பறக்க விட்ட வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா.

Continues below advertisement

இந்த ஆண்டு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா.

Continues below advertisement

சாதனை மன்னன் ரோஹித் ஷர்மா:

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று (ஜூன் 24) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இதன் மூலம் அரையிறுதிச் சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை இந்திய அணி பெற்றுள்ளது.

முன்னதாக நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம்...

உலகக்கோப்பையில் அதிவேக அரைசதம்:

இந்த ஆண்டு நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா. அதாவது வெறும் 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட அரைசதத்தை பதிவு செய்தார். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிவேக அரைசதம்:

சர்வதேச டி20 போட்டிகளை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட முதல் அதிவேக அரைசதம் இதுதான். அதாவது 19 பந்துகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்வதேச அளவில் பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா.

200 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர்:

சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை அதிவேகமாக 200 சிக்ஸர்களை பறக்க விட்ட வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. அதாவது இதுவரை அவர் விளையாடியுள்ள 150 டி20 இன்னிங்ஸ்களில் 203 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியின் பேட்டர் மார்டின் குப்டில். 118 இன்னிங்ஸ்களில் 173 சிக்ஸர்கள் எடுத்திருக்கிறார். 

பவர்ப்ளேவில் அதிக ரன்கள்:

இந்த உலகக் கோப்பையில் பவர்ப்ளேவில் 50 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் மூலம் படைத்துள்ளார் ரோஹித் ஷர்மா.  அதேபோல், உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் தன் வசப்படுத்தியுள்ளார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா.

விமர்சனங்களுக்கு பதிலடி:

இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் சொதப்பலான ஆட்டத்தை ரோஹித் ஷர்மா வெளிப்படுத்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இச்சூழலில் தான் அந்த விமர்சனங்களுக்கு தன்னுடைய பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் ஷர்மா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் 41 பந்துகள் களத்தில் நின்ற அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் என மொத்தம் 92 ரன்கள் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola