India vs Australia LIVE SCORE: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் இன்றைய சூப்பர் 8 சுற்று போட்டியின் நேரலையை இங்கே பார்ப்போம்:
ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்திய அணி.
டிம் டேவிட் 15 ரன்களில் அர்ஸ்தீப் சிங் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ வாடே 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ட்ராவிஸ் ஹெட் 76 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ட்ராவிஸ் ஹெட் 76 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 141 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 117 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் 24 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
நீண்ட நேரமாக விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்திய அணிக்கு விக்கெட் கிடைத்துள்ளது. அதன்படி மிட்செல் மார்ஸ் 37 ரன்களில் குல்தீப் யாதவ் வீசிய 9 வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 65 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்துள்ளது.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 8 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 6 ரன்களில் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப்சிங் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ட்ராவிஸ் ஹெட் களம் இறங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி வீரர் ஷிவம் துபே 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் அவுட்டானார். அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் அடித்தார்.
இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்களுக்கு அவுட்டானார். அவர் 41 பந்துகளில் 7 பவுண்டரி 8 சிக்ஸர் விளாசினார்.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணி 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 8.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்கள் எடுத்துள்ளது.
அடிரடியாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் விக்கெட்டை பறிகொடுத்தார். 14 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 15 ரன்கள் எடுத்தார்.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்தியஅணி 1 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அசத்தி வருகிறார்.
பவுண்டரியை தொடர்ந்து சிக்ஸர் விளாசி உள்ளார் ரிஷப் பண்ட்.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.
களம் இறங்கிய 9 வது பந்தில் ரிஷப் பண்ட் பவுண்டரி விளாசி இருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா அதிரடியான அரைசதத்தை பதிவு செய்துள்ளார். 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் விளாசி 50 ரன்களை பதிவு செய்தார்.
மழையால் சிறுது நேரம் போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து வருகின்றனர்.
இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி வந்த சூழலில் மழை குறிக்கிட்டுள்ளதால். போட்டி சற்று நிறுத்தப்பட்டிருக்கிறது.
நான்கு ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் நிற்கின்றனர்.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மிட்செல் ஸ்டார்க் வீசிய இந்த ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸர்களை ரோஹித் ஷர்மா பறக்க விட்டார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி வருகிறார்.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இரண்டாவது முறையாக டக் அவுட் ஆகி வெளியேறினார்.
முதல் ஓவர் முடிந்த நிலையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.
மிட்செல் ஸ்டார்க் வீசிய 3 வது பந்தில் முதல் பவுண்டரியை விளாசி உள்ளார் ரோஹித் ஷர்மா.
இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கியுள்ளனர்.
Background
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 24) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 31 டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக இந்திய அணி 19 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போயுள்ளது. அதேநேரத்தில், டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 3 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
சூப்பர்-8 சுற்றில் இரு அணிகளும் மோதும் கடைசிப் போட்டி இதுவாகும். இந்திய அணி, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்திற்கு எதிராக வெற்றியும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா:
டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியா (பிளேயிங் லெவன்):
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் ), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
ஆஸ்திரேலியா அணி (பிளேயிங் லெவன்):
டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ்(கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர் ), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -