ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு நாட்டு அணியின் வீரர்களும் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பியுள்ளது நம்பிக்கை அளித்துள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா டிம் டேவிட்டிற்கு இந்த தொடர் மூலம் டி20 தொடரில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது இருநாட்டு ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறியதற்கு பிறகு இந்தியா வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் களமிறங்கும். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாதது இந்திய அணிக்கு பலமாக இருக்கலாம். அதேபோல், வார்னரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணி அவருக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளது. 


ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் சிறிய ஓய்விற்கு பிறகு களமிறங்குகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜிம்பாவே மற்றும் நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்கவில்லை. கடைசியாக இவர் ஜூலையில் இலங்கையில் நடைபெற்ற தொடரில் பங்கேற்றார். அதன்பின்னர் சிறிய ஓய்வை எடுத்து வந்தார். இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய தொடரில் இவர் அணிக்கு திரும்பியுள்ளார். 


இந்தநிலையில் இரு அணிகளும் இந்த தொடரை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிலாம். டி 20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் இரு அணிகளும் இந்த தொடரை தங்களுக்கு சாதமாக்கி கொள்ள திட்டமிட்டுள்ளது. 


இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும், நேரலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரிலும் காணலாம். 


டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 


இந்தியா அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் , புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா


ஆஸ்திரேலியா அணி விவரம்:


ஆரோன் பின்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா