மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தி அணி 2024 ஆம் ஆண்டு தனது முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 2024 டி20 உலகக் கோப்பை அணி எப்படி இருக்கும் என்பது கிட்டத்தட்ட தெளிவாகிவிடும். வருகின்ற ஜனவரி 11ம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்கான இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி மொஹாலியில் ஜனவரி 11ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியானது இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் இந்தூரில் இரண்டாவது டி20 போட்டியிலும், தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திலும் மோதுகிறது. அனைத்து போட்டிகளும் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்த ரோஹித் மற்றும் விராட்:
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார். அவருடன் நட்சத்திர பேட்ஸ்மேனும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலியும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார். இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாட இருக்கின்றனர்.இதன்மூலம், இந்த இரு வீரர்களும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்று தெளிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல். ரவி பிஷ்வோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி:
இப்ராகிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனாத், அஸ்மத்துல்லா, ஷர்ஃபுல்லாஹ் உமர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரித் அகமது, நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்.
நேரடியாக எங்கு பார்க்கலாம்?
ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான டி20 தொடரை கண்டு களிக்கலாம். அதேசமயம் மொபைலில் போட்டியைப் பார்க்கும் பார்வையாளர்கள் ஜியோ சினிமா செயலியில் இந்தத் தொடரை நேரடியாக காணலாம். இது தவிர, ABP நாடு லைப் ப்ளாக்கில் அப்டேட்களை அடுத்தடுத்து காணலாம்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 தொடர் அட்டவணை:
- முதல் டி20- 11 ஜனவரி- மொஹாலி
- இரண்டாவது டி20- 14 ஜனவரி- இந்தூர்
- மூன்றாவது டி20- ஜனவரி 17- பெங்களூரு