IND vs AFG LIVE Score T20 WC: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா!
IND vs AFG Live Score T20 World Cup 2024: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தின் நேரலையை இங்கு பார்ப்போம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
18 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது ஆப்கானிஸ்தான் அணி.
முகமது நபி 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
19 ரன்களில் நஜிபுல்லா சத்ரன் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர் அஸ்மத்துல்லா உமர்சாய் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் குல்பதின் நைப் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் நிற்கின்றனர்.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதல் ஓவர் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி!
அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 28 பந்துகள் களத்தில் நின்ற அவர் 53 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசியுள்ளார்.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது
15 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது
14 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களுடன் விளையாடி வருகிறது.
4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 100 ரன்களை தாண்டி விளையாடி வருகிறது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணி வீரர் ஷிவம் துபே 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
சூர்ய குமார் 9 ரன்களும் ஷிவம் துபே 10 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடி வந்த இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்
6 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
முதல் ஓவர் முடிந்த நிலையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.
Background
ஐசிசி டி-20 உலகக் கோப்பை:
ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்ற நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டன.
அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. அவை குரூப்-1 மற்றும் குரூப் 2 என பிரிக்கப்பட்டு தற்போது போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (ஜூன் 20) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதல்:
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, பார்படோஸில் உள்ள கென்சிங்டோன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. லீக் சுற்றில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி 3 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியை பதிவு செய்தது. சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
பலம், பலவீனங்கள்:
இந்திய அணி விளையாடிய லீக் போட்டிகள் அனைத்துமே அமெரிக்காவில் தான் நடைபெற்றன. அந்த மைதானங்களில் இந்திய பேட்ஸ்மேன்களால் பெரிதாக சோபிக்க முடியவில்லை என்பதே உண்மை. அதேநேரம், பந்துவீச்சாளர்கள் கூட்டாக சேர்ந்து அபார திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
அனால், சூப்பர் 8 சுற்று போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இங்கு இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட வேண்டியது கட்டாயம். குறிப்பாக கேப்டன் ரோஹித், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ரன் குவித்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியமாகும். கோலி களமிறங்கிய 3 போட்ட்களிலும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தால், அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தமட்டில், நடப்பு உலகக் கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குர்பாஸ் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க, ஃபருகி போன்றோர் விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். கேப்டன் ரஷித் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களித்து அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, ஒட்டுமொத்த கூட்டு முயற்சியை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
நேருக்கு நேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை எதிர்கொண்ட 8 முறையும், இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -