IND vs ZIM 2022 Squad: ஜிம்பாவே ஒருநாள் தொடரிலிருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்... மாற்று வீரர் யார் தெரியுமா?

ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றிருந்தார்.

Continues below advertisement

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடருக்கு பின்பு இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் நேற்று இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்று இருந்தார். 

Continues below advertisement

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்தச் சூழலில் அவருக்கு பதிலாக ஷபாஸ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

 

இந்தக் காயத்திற்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வாஷிங்டன் சுந்தர் ஆகஸ்ட் 15ஆம் தேதி லண்டனிலிருந்து ஜிம்பாவே செல்வதாக இருந்தது. இந்தச் சூழலில் அவருடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் ஜிம்பாவே தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் மீண்டு வருவதற்கு சில நாட்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் ஜிம்பாவே தொடரில் விளையாடுவது சற்று கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. 

 

வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் தொடருக்கு பிறகு காயம் காரணமாக சர்வதேச தொடர்களில் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக அவருடைய உடற்தகுதியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று மற்றொரு தரப்பு தெரிவிக்கின்றனர். தற்போது காயத்திலிருந்து குணம் அடைந்துள்ள வாஷிங்டன் சுந்தர் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறார். இவர் லங்காஷேர் அணிக்காக விளையாடி வாஷிங்டன் சுந்தர் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார். காயம் காரணமாக தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் ஒரு தொடரிலிருந்து விலகியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement