உலககோப்பைக்கு பிறகு நியூசிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடவிருக்கிறது. மொத்தம் மூன்று டி-20 போட்டி மற்றும் முன்று ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதவுள்ளன.
நியூசிலாந்து பணனிக்கும் இந்திய அணி
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பது டி-20 உலககோப்பை கிரிக்கெட்டுக்காகத்தான் இருக்கும். பங்கேற்கவுள்ள ஒவ்வொரு கிரிக்கெட் அணிகளும் கோப்பையை வெல்ல பல்வேறு உக்திகளுடன் களமிறங்கவுள்ளன. இன்னும் இந்த உலககோப்பை காய்ச்சலே தீராமல் இருக்கும் போது, இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தியை நியூசிலாந்து அணியின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் தளமான ”பிளாக் கேப்ஸ்” -ல் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி-20 உலகக்கோபை கிரிக்கெட் போட்டித் தொடருக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளை விளையாட நியூசிலாந்து பயணம் செய்யவுள்ளது. நவம்பர் 18 முதல் நவம்பர் 30 முதல் நடக்கவுள்ள தொடரில் முதலில் மூன்று டி-20 போட்டியிலும், அடுத்து மூன்று ஒருநாள் போட்டியிலும் விளையாடவுள்ளது. முதல் டி-20, நவம்பர் 18ல் வில்லிங்டன்னில் உள்ள ஸ்கை ஸ்டேடியமிலும், இரண்டாவது டி-20, நவம்பர் 20ல், மவுண்ட் மவுன்கானுய்வில் உள்ள பே ஓவல் மைதானத்திலும், மூன்றாவது டி-20, நவம்பர் 22ல் நேப்பியரில் உள்ள மெக்லென் பார்க்கிலும் நடக்கவுள்ளது.
இதைத் தொடர்ந்து, நவம்பர் 25 முதல் 30 வரை மூன்று ஒருநாள் போட்டியும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளதகவும் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்