இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயார்ன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மென்னும் இங்கிலாந்து அணிக்காக உலகோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயார்ன் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


இங்கிலாந்து நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன், தனது திறமையான பேட்டிங் மூலம் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். மோர்கனின் தலைமையின் கீழ் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போடிக்கான உலககோப்பையை வென்று அசத்தியது. இங்கிலாந்து வென்ற முதல் உலககோப்பயும் அது தான். இவருக்கு வயது 35. 


 முதன்முதலில் அயர்லாந்து அணிக்காக இயான் மோர்கன்


2010ம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய மோர்கன், பின்னர் இங்கிலாந்து அணிக்காக ஆடினார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்காக மோர்கன் இதுவரை 248 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில், 14 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களும் அடங்கும்.  115 டி20 போட்டிகளில் ஆடி 1805 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 14 அரைசதங்களும் அடங்கும். 83 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 அரைசதங்களுடன் 1146 ரன்களை அடித்துள்ளார். மொத்தம் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதங்களுடன் 700 ரன்களை விளாசியுள்ளார்.


2012ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடாத மோர்கன் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். கடந்த சில மாத காலமாகவே மோசமான பார்மில் அவர் உள்ளார். இதனால், கடந்த ஐ.பி.எல். தொடரில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார்.


இந்த நிலையில், கடந்த சில மாத காலமாக இயான் மோர்கனின் பேட்டிங் பார்ம் மிகவும் மோசமாக  இருந்து வருகிறது. சமீபத்தில் நெதர்லாந்து அணியுடன் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் 2 போட்டிகளில் டக் அவுட்டாகினார். ஆஸ்திரேலியாவில் இன்னும் சில மாதங்களில் டி20 உலககோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனின் பேட்டிங் பார்ம் அணி நிர்வாகத்திற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.


அவுட் ஆஃப் பார்மிலிருந்து வந்த இயார்ன் மோர்கன், கம் பேக் கொடுப்பார் என நம்பிக்கொண்டு இருந்த அவரது ரசிகர்கள்,  ஓய்வு அறிவிப்பால் பெறும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.