டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வி எதிரொலியாக பிசிசிஐ அதிரடி மாற்றங்களை செய்ய முயற்சிகளை மேற்கொள்ல திட்டமிட்டு வருகிறது. 


டி20 கேப்டன் :


அதன் அடிப்படையில், புதிய தேர்வுக் குழுவை பி.சி.சி.ஐ. நியமித்த பிறகு, இந்திய அணி கேப்டன் பதவியை பிரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த புதிய குழு "ஒவ்வொரு பார்மேட்டிலும் தனித்தனி அணிக்கு கேப்டனை நியமிக்க திட்டமிட்டுள்ளது. மூன்று பார்மேட்டிலும் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை இந்தியாவின் முழுநேர டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்றும், அதே நேரத்தில் ரோஹித் சர்மாவை ஒருநாள் மற்றும் டி20 பார்மேட்டில் தொடர்ந்து கேப்டனாக இருப்பார்” என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். 






நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக உள்ளார். இவர் சமீபத்தில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தொடக்க சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தார். இதன் காரணமாக டி20 பார்மேட்டுக்கு ஹர்திக் பாண்டியா முழுநேர கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதேபோல், கேப்டன் பதவிக்கான மற்றொரு பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 


ஒருநாள் போட்டி கேப்டன் :


ரோகித் ஷர்மாவுக்கு ஏற்கனவே 35 வயது ஆகிவிட்டது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இவர் தனது ஓய்வை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த தொடருக்கு பின்னர் அடுத்த ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் பெயர் முதலிடத்தில் உள்ளது. 






முன்னதாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் ஷர்மா தலைமையில் செயல்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்வியே இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் ஷர்மா தலைமையில் செயல்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். உலககோப்பை கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்வியே இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


புதிய தேர்வுக்குழு :


மேலும், இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தேசிய தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


மொத்தம் 5 பேர் கொண்ட தேர்வுக்குழுவில் உறுப்பினராவதற்கு இந்திய அணிக்காக குறைந்தது 7 டெஸ்ட் போட்டிகளோ அல்லது 30 முதல்தர போட்டிகளோ அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளோ ஆடியிருக்க வேண்டும். மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 வருடம் ஆகியிருக்க வேண்டும்.


விருப்பமுள்ள வீரர்கள் இதற்கான விண்ணப்பங்களை வரும் 28-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.