T20 World Cup: இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றதை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா:
பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. இது இந்திய ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று வெற்றியை புனே முதல் ஐதராபாத் வரை, சத்தீஸ்கர் முதல் கேரளா வரை, அதற்கும் அப்பால் ரசிகர்கள் நள்ளிரவில் தெருக்களில் குவிந்து, கொடிகளை அசைத்தும், பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பகிர்ந்தும் கொண்டாடினர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
விழாக்கோலம் பூண்ட தெருக்கள்:
புனேவில் தெருக்களில் திரண்ட மக்கள் விசில் அடித்தும், இந்தியாவின் கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில், ஐதராபாத்தில் நூற்றுக்கணக்கான உற்சாகமான ரசிகர்கள் கூடி, "இந்தியா இந்தியா" என்று ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், இந்தியாவின் வெற்றியை ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதால், வானவேடிக்கைகள் கொளுத்தினர்.
மும்பையும் இதேபோன்ற உற்சாகத்தை கண்டது. கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ரசிகர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்' போன்ற தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர்.
மும்பை விமான நிலையத்தில் இருந்த பயணிகள் வெற்றியை இசை வாத்தியங்கள் முழங்க, நடனமாடி கொண்டாடினர். மேலும் 'வாழ்த்துக்கள் டீம் இந்தியா' என்ற பேனரையும் கையில் ஏந்தி இருந்தனர்.
கேரளாவில் கூட, ரசிகர்கள் நடனமாடி வெற்றியைக் கொண்டாடினர். கிரிக்கெட் களத்தில் இந்தியா பெற்ற வெற்றி நாடு தழுவிய மகிழ்ச்சிக்கு காரணமானது. டெல்லியில், பட்டாசுகள் வெடித்தும், 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கங்களை எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜம்முவில் தேசிய மூவர்ணக் கொடியுடன் "பாரத் மாதா கி ஜெய்" கோஷங்களை எழுப்பி, ரசிகர்கள் வரலாற்று வெற்றியைக் கொண்டாடினர்.