12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன்களில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்
விராட் கோலி:
அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ரயில்வேஸுக்கு எதிரான டெல்லி இன்னிங்ஸின் முதல் இன்னிங்ஸில் வெறும் 6 ரன்களில் போல்டாகி வெளியேறினார் விராட் கோலி. ரயில்வே மற்றும் டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் நடைப்பெற்று வருகிறது. பிசிசிஐ-யின் புதிய விதிகளின்படி இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அதன் படி இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ரஞ்சி போட்டியில் விளையாடி வருகின்றனர்.
அதன் படி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் களமிறங்கினார்.
இதையும் படிங்க: Ruturaj Gaikwad: மஞ்சள் படையின் கேப்டன், ருத்ராஜ் கெய்க்வாட்டின் பிறந்தநாள் - ஐபிஎல் போட்டியில் டாப் 5 சம்பவங்கள்
கூடிய கூட்டம்:
விராட் கோலியின் பேட்டிங்கை பார்ப்பதற்காகவே மைதானம் முழுவதும் நிரம்பி இருந்தது. பொதுவாக இது போன்ற ரஞ்சி போட்டிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் வருவதே அரிது. ஆனால் விராட் கோலி விளையாடவுள்ளார் என்பதால் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தை நோக்கி போட்டியின் முதல் நாளான நேற்று ரசிகர்கள் கூட்டத்தில் மைதானம் நிரம்பி வழிந்தது. விராட் கோலி என்கிற ஒற்றை மனிதனின் பேட்டிங்கை காண்பதற்காக 20000 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.
கோலி அவுட்:
இந்த போட்டியில் முதலில் ரயில்வேஸ் அணி பேட்டிங் ஆடியது, அப்போது கோலி மைதானத்தில் இருந்த ரசிகர்களை தனது சைகைகள் மூலம் ஆரவாரம் செய்து கொண்டே இருந்தார். ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸ்சில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த நிலையில் நான்காவது வீரராக களமிறங்கினார் விராட் கோலி களமிறங்கினார். மைதானத்தில் பேட்டிங் வரும் போது மைதானமே அதிர்ந்தது. விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் ரசிகர்களின் இந்த சந்தோசம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடுத்த பந்தே விராட் கோலி கிளீன் போல்டானார். ரயில்வேஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர், ஹீமான்சு சங்கவான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
காலியான மைதானம்:
விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறியவுடன் மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் கிளம்பிச்சென்றனர். இதனால் மொத்த மைதானமும் காலியானது. நீண்ட நாட்களாக ஃபார்மை மீட்க போராடிய விராட் கோலி ரஞ்சி போட்டியிலாவது பழைய ஃபார்முக்கு திரும்புவாரா என்று எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.