ஐ.சி.சி. 2024-ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா வென்றுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.2024-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பும்ராவுக்கு சிறப்பாக அமைந்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்க தேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பும்ராவின் மிரட்டலான பந்துவீச்சால் இந்திய அணி வென்றது. கிரிக்கெட் போட்டிகளில் சவாலான சூழலிலும் அவரின் திறமையான பந்து வீசும் திறன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக அவரை உருவாக்கியது.
2024-ம் ஆண்டில் பும்ரா நிறைய புதிய சாதனைகளை படைத்தார். 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்களை எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்தின் Gus Atkinson 11 போட்டிகளில் 52 விக்கெட்டுகள் எடுத்த சாதனையை முறியடித்தார்.
2024-ல் பும்ரா 357 ஓவர்கள் வீசி 71 விக்கெட்களுடன் 2.96 Economy உடன் இருக்கிறார். ஒரு ஆண்டில் 70 விக்கெட்கள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ராவும் இணைந்துவிட்டார். இதில் கபில் தேவ், அணில் கும்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் பும்ராவும் சேர்ந்துவிட்டார்.
டெஸ்க் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், 17 பந்து வீச்சாளர்கள் ஓராண்டில் 70 விக்கெட்கள் வரை எடுத்துள்ளனர். 2024-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 8 விக்கெட்கள்,இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்கள் என எடுத்தார். பார்டர் கவாஸ்கர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்தார்.
ஜஸ்ப்ரித் பும்ரா - கிரிக்கெட்
- டெஸ்ட் கிரிக்கெட் -205 விக்கெட்கள் - 45 போட்டிகள்
- ஒருநாள் கிரிக்கெட் - 149 விக்கெட்கள் 89 போட்டிகள்
- டி20 கிரிக்கெட் போட்டி - 89 விக்கெட்கள் - 70 போட்டிகள்
இதுவரை ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது வென்ற இந்திய அணியினர் விவரம்:
- ராகுல் ட்ராவிட் - 2004
- கெளதம் கம்பீர் - 2009
- வீரேந்திர சேவாக் - 2010
- ரவிச்சந்திரன் அஸ்வின் - 2016
- விராட் கோலி - 2018
- ஜஸ்ப்ரித் பும்ரா - 2024
ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்கள் விருது இதுவரை நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- மிட்சல் ஜான்சன் - (ஆஸ்திரேலியா)
- டேல் ஸ்டெயின் - (தென்னாப்பிரிக்கா)
- Pat Cummings (ஆஸ்திரேலியா)
- ஜஸ்ப்ரித் பும்ரா (இந்தியா)
50- ஓவர் ஃபார்மெட்டில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் ஐ.சி.சி. சிறந்த வீரராக ஸ்ம்ருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.