இந்தியாவில் மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படும் ரஞ்சி டிராபி இன்று முதல் பல்வேறு நகரங்களில் விளையாடப்பட இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் எலைட், பிளேட் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
எலைட் பிரிவு:
குரூப் ஏ: ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், சவுராஷ்டிரா, சேவைகள், விதர்பா
குரூப் பி:
ஆந்திரா, அசாம், வங்காளம், பீகார், சத்தீஸ்கர், கேரளா, மும்பை, உத்தரபிரதேசம்
குரூப் சி:
சண்டிகர், கோவா, குஜராத், கர்நாடகா, பஞ்சாப், ரயில்வே, தமிழ்நாடு, திரிபுரா
குழு டி:
பரோடா, டெல்லி, இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மத்திய பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, உத்தரகாண்ட்
இந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடஙக்ளை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். மேலும், லீக் சுற்றில் மோசமான இடத்தை பெறும் கடைசி இரண்டு அணிகள் அடுத்த சீசனில் ‘பிளேட்’ பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.
பிளேட் பிரிவு:
கடந்த 2022-2023 சீசனில் சொதப்பிய எலைட் பிரிவில் இருந்து தரம் இறக்கப்பட்ட நாகலாந்து, ஹைதராபாத், மேகலாயா, சிக்கிம், மிசோரம், அருணாசல பிரதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதுகிறது. லீக் முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் எலைட் பிரிவுக்கு முன்னேறும்.
போட்டிகள் எப்போது தொடங்குகிறது..?
’எலைட்’ பிரிவானது இந்தியாவில் உள்ள 48 இடங்களில் விளையாடப்படும். அதேசமயம், ’பிளேட்’ பிரிவு போட்டியானது ஐந்து இடங்களில் நடைபெறும். எலைட் இறுதிப் போட்டி மார்ச் 10 ம் தேதி நடைபெறும் நிலையில், பிளேட் பிரிவின் இறுதி மோதல் பிப்ரவரி 17 தேதியுடன் முடிவடைகிறது. இதில், விளையாடும் 2 அணிகள் எலைட் பிரிவுக்கு தகுதிபெறும்.
இம்மாத இறுதியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, இந்திய வீரர்கள் டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட்டில் பிஸியாக இருப்பார்கள். இதில் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் மற்றும் டி-20 உலகக் கோப்பையும் அடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அனுபவ வீரர்கள் அனைவரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க முயற்சி செய்வார்கள். ரஞ்சி டிராபியில், தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறிய அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா மீது அனைவரின் பார்வையும் உள்ளது.
41 முறை சாம்பியனான மும்பை அணியை ரஹானே வழிநடத்துகிறார். இதேபோல், கடந்த சீசனில் அதிகபட்சமாக 990 ரன்கள் குவித்த கர்நாடகாவின் மயங்க் அகர்வால், மீண்டும் இந்த ஆண்டு ஜொலித்து இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப முயற்சிப்பார்.
தமிழ்நாடு அணி எப்படி..?
பாபா இந்திரஜித், பாலசுப்ரமணியம் சச்சின், சாய் சுதர்சன் , விமல் குமார், சாய் கிஷோர் (கேப்டன்), விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் , நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பிரதோஷ் ரஞ்சன் பால் (விக்கெட் கீப்பர்), சுரேஷ் லோகேஷ்வர் (விக்கெட் கீப்பர்), த்ரிலோக் நாக், குல்தீப் சென், முகமது, அஜித் ராம், சந்தீப் வாரியர், நடராஜன்
ரஞ்சி டிராபியில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி இன்று காலை 9.30 மணிக்கு குஜராத் அணியை எதிர்கொள்கிறது.