இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்த ரன்கள் போதுமா.? சூர்யா பாய்ஸ் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவிற்கு 168 ரன்கள் இலக்கு
இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே இருவரும் ரன்களை சேர்க்க ஆரம்பித்த நிலையில், 28 ரன்கள் எடுத்திருந்தபோது, அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து சிவம் டூபே கில்லுடன் ஜோடி சேர்ந்தார். தூபே அதிரடியை தொடங்கிய நிலையில், 22 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினார்.
இந்நிலையில், மறுமுனையில் 46 ரன்களுடன் அரை சதத்தை நோக்கி அடிவந்த சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கிய நிலையில், 20 ரன்களை எடுத்து ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பரான ஜிதேஷ் சர்மா களமிறங்கினார்.
இந்நிலையில், மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மா 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். இதனிடையே, 3 ரன்களில் ஜிதேஷ் சர்மா ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அக்சர் படேல் களமிறங்கி அதிரடி காட்டினார். இந்நிலையில், மறுமுனையில், 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அர்ஷ்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இறுதியில், அதிரடி காட்டிய அக்சர் படேல் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வருண் சக்கரவர்த்தி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் மற்றும் ஜாம்பா தலா 3 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இந்த டி20 தொடரில், இன்னும் ஒரு போட்டி பாக்கி இருக்கும் நிலையில், தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இந்த போட்டியில் வெல்பவர்கள் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெறுவார்கள்.
168 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி எட்டுமா.? இந்திய பந்துவீச்சாளர்களில் கலக்கப் போவது யார்.? பொறுத்திருந்து பார்ப்போம்.