டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்களை குவித்த அணி என்ற இங்கிலாந்து அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்து இருக்கிறது.
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர்:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 யில் விளையாடுகிறது. இதில், கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து கன்பூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. கடந்த மூன்று நாட்களகாக தொடர் மழையால் போட்டி நடைபெறவில்லை.
இன்று (செப்டம்பர் 30) முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. இதில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில்,2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் சேர்த்துள்ளது. அந்தவகையில் இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்த இந்திய அணி மற்றொருமொரு சாதனையை செய்திருக்கிறது.
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள்:
அதாவது, கான்பூரில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் நிலவரப்படி, இந்திய வீரர்கள் 2024 இல் 14 இன்னிங்ஸ்களில் 90 சிக்ஸர்களை அடித்துள்ளனர். இதற்கு முன்னதாக ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக் ஸர்களை விளாசிய அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி தான் படைத்தது.
அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் கூட அதிரடியாக விளையாடும், "பாஸ்பால்" முறையை பயன்படுத்தி அந்த அணி இந்த சாதனையை 89 சிக் ஸர்களை விளாசி செய்திருந்தது. இச்சூழலில் தான் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இந்த சாதனையை முறியடித்துள்ளது.
ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு அணி அடித்த அதிக சிக்ஸர்கள்:
இந்தியா – 90 (2024)
இங்கிலாந்து – 89 (2022)
இந்தியா – 87 (2021)
நியூசிலாந்து – 81 (2014)
நியூசிலாந்து – 71 (2013