Jasprit Bumrah: உலககோப்பை  இந்திய அணியில்  வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெறுவது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார். 


இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தால் உலககோப்பைத் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? எனும் சந்தேகம் இருந்து வந்தது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார். தீவிரமான முதுகுவலி காரணமான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 


இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா ஆசிய கோப்பைத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. ஹர்ஷல் படேலும் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், இந்திய அணியின் பந்துவீச்சு ஆசிய கோப்பையில் மிகவும் மோசமாக இருந்தது.


இதையடுத்து, காயத்தால் இருந்து மீண்ட பும்ராவும், ஹர்ஷல் படேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பினர். ஆஸ்திரேலிய தொடரில் ஹர்ஷல் படேலும், பும்ராவும் சிறப்பாக பந்துவீசினர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பும்ரா இடம்பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக பும்ரா களமிறங்கவில்லை.


இந்த நிலையில், பும்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அடுத்து வரும் போட்டியில் அவர் ஆட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய பும்ரா உலககோப்பையிலும் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. 






இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். இதை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. உலககோப்பை டி20 தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பும்ரா காயத்தால் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.  அவருக்கு பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற உள்ளார் என்ற தகவல்களும் கிரிக்கெட் வட்டாரத்தில் உலவுகின்றன. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கவுகாத்தியில் அக்டோபர் 2-ந் தேதியும், 4-ந் தேதி இந்தூரிலும் டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்பின்னர், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.


இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பும்ரா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, பும்ரா குறித்து ஒட்டு மொத்த அணி நிர்வாகமும் இணைந்து தான் முடிவு செய்யும். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டு ஊடகங்களுக்குச் சொல்லப்படும். மேலும், அவரது உடல்நிலை குறித்து நீங்கள் எழுப்பும் கேள்விக்கு என்னால் இப்போது எந்த விரிவான பதிலும் தரமுடியாது. மேலும், இன்னும் உலககோப்பை அணியில் இருந்து பும்ரா நீக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.