Indian  Cricket Team Coach: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.


இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்:


இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு திங்கட்கிழமை உடன் முடிவடைந்தது.  ஆனால் பிசிசிஐ மற்றும் அதன் விருப்பப்பட்டியலில் முதன்மையான இடம் வகித்துள்ள, கவுதம் கம்பீர் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.


அவரது ஆலோசனயின் கீழெ செயல்பட்ட  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,  மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு கம்பிர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம்,பிசிசிஐ எதிர்பார்த்தபடி உலகத்தரம் வாய்ந்த முன்னாள் வீரர்கள் யாரும் கூட அந்த பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.


கம்பீர் விருப்பம் காட்டாதது ஏன்?


ஏற்கனவே கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து, கம்பிர் இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை கம்பீர் வென்றுள்ளார். தற்போது ஆலோசகராக செயல்பட்டும் கோப்பை வெல்ல வழிகாட்டியுள்ளார். இதனால் கொல்கத்தா அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் உடன், கம்பீரின் நெருக்கம் அதிகரித்துள்ளது.


அதோடு, அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து கொல்கத்தா அணியுடன் சேர்ந்து பயண்க்க, பிளாங்க் செக் ஒன்றை கம்பீருக்கு ஷாருக்கான கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பிசிசிஐ-யின் எதிர்பார்ப்பு என்ன?


புதிய பயிற்சியாளர் தொடர்பாக பேசிய பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா, ” உலக கிரிக்கெட் தரவரிசையில் உயர்ந்தவராகவும், அதேநேரம் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு பற்றி நன்கு அறிந்தவராகவும் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு குறிப்பிடத்தக்க வெளிநாட்டுப் பெயர் எவரும் விண்ணப்பிக்கவில்லை என்பது புரிகிறது. 


பயிற்சியாளராகும் லட்சுமணன்?


தற்போதைய சூழலில் இந்திய அண்யின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான முதன்மை தேர்வாக, தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான வ்விஎஸ் லட்சுமணன் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முழு நேர பயிற்சியாளராக இருக்க அவரும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. காரணம், பயிற்சியாளராக பொறுப்பேற்றால், ஆண்டின் 10 மாதங்கள் இந்திய அணியுடனே பயணிக்க வேண்டியதாக இருக்கும்.


பிசிசிஐ சொல்வது என்ன?


புதிய பயிற்சியளர் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரிகள், “ விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்தாலும், புதிய பயிற்சியாளர் தொடர்பான இறுதி முடிவை எடுக்க, பிசிசிஐ நிர்வாகம் இன்னும் சற்று கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும். தற்போதைய சூழலில் இந்திய கிரிக்கெட் அணி டி-20 உலகக் கோப்பை தொடரில் கவனம் செலுத்தி உள்ளது. அதன்பிறகு இலங்கை மற்றும் ஜிம்பாப்வே உடனான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும். அதேநேரம், தேசிய கிரிக்கெட் அகாடெமியைச் சேர்ந்த மூத்த பயிற்சியாளர்கள் இந்திய அணியுடன் பயணம் மேற்கொள்வர்” என தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரான டிராவிட்டின் பதவிக்காலம், வரும் ஜுன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.