இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் மெல்போர்னில் நடக்கும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன, வழக்கம் போல இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கும் ஹைப் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் இரு அணிகளுக்குமே சம வாய்ப்பு உள்ளது, வெற்றி யாருக்கு என்பதையெல்லாம் இப்போதே கணிக்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.


துபாய் போட்டி


2020 ஆம் ஆண்டுக்கான, உலகக்கோப்பை டி20 போட்டி கொரோனா காரணமாக நடக்காத காரணத்தால், அதனை கடந்த வருடம் துபாயில் நடத்தினார்கள். அந்த போட்டியில் எல்லோரது எதிர்பார்ப்பையும் உடைத்த இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் விக்கெட்டே இழக்காமல் வென்றது. ஷாஹின் அப்ரீடி பவுலிங்கில் காலி செய்ய பேட்டிங்கில் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் விக்கெட்டே கொடுக்காமல் இந்திய பந்து வீச்சை சிதறடித்தனர்.



இந்த வருட உலகக்கோப்பை


இந்த தோல்வி மட்டுமின்றி, டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறியது. முதல் போட்டியிலேயே தோல்வியிலிருந்து துவங்கியதால் நல்ல தொடராக அமையாமல் போனது. எனவே இம்முறை கண்டிப்பாக செமி ஃபைனலுக்கு முதலில் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும் இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பை டி20-யில் அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது.


மெல்போர்ன் போட்டி


முழு முனைப்புடன் இறங்கும் இந்தியாவுக்கு வழக்கம் போல முதல் போட்டி பாகிஸ்தானுடன் தான். 23ம் தேதி மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. சாதாரண கிரிக்கெட் போட்டியை போர் போல பார்க்கும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருந்தாலும், ரிட்டயர்டு கிரிக்கெட் வீரர்கள் அப்படி விடுவதில்லை. ஷோயப் அக்தர் போட்டி குறித்து அனல் பறக்க இப்போதே பேச தொடங்கி விட்டார்.



ஷோயப் அக்தர்


இந்த போட்டி குறித்து பேசிய ஷோயப் அக்தர், "இந்திய அணி ஏனோதானோ என்று ஒரு அணியைத் தேர்வு செய்யக்கூடாது. பாகிஸ்தானுக்கு எதிராக ரோல்களை தெளிவாக முடிவு செய்து வலுவான அணியை இந்தியா களமிறக்க வேண்டும். அணி நிர்வாகம் ஜாக்கிரதையாக இந்திய அணியைத் தேர்வு செய்ய வேண்டும். பாகிஸ்தானால் இந்த முறை கடந்த முறை போல எளிதாக வெற்றி பெற முடியாது." என்று கூறியுள்ளார்.


70,000 இந்திய சப்போர்ட்டர்கள்


மேலும் பேசிய அவர், "சரியான அணியைத் தேர்வு செய்தால் நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானை வீழ்த்தலாம். இப்போது இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கின்றன. எனவே முடிவை கணிப்பது கடினம். மெல்போர்ன் பிட்ச் நல்ல பிட்ச். பாகிஸ்தான் இரண்டாவதாக பவுலிங் வீசினால் நல்ல பலன் இருக்கும். 1 லட்சம் பேர் மைதானத்திற்கு போட்டியை நேரில் கண்டு களிக்க வருவார்கள் இவர்களில் 70,000 பேர் இந்தியாவுக்கு சப்போர்ட் செய்வார்கள், எனவே பாகிஸ்தானுக்கு அதிக அழுத்தம் ஏற்படும்", எனக் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.