வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் மாபெரும் சாதனைப் படைக்க இந்திய அணி காத்திருக்கிறது. 


வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில்  3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இதே மைதானத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 




இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 39 வருட ஆசை ஒன்று நிறைவேறப் போகிறது. அதாவது 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றினால் ஒருநாள் வரலாற்றில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த சாதனையை இந்தியா படைத்து விடும். கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய மண்ணில் விளையாடி தொடரை முழுவதுமாக கைப்பற்றி இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்றதில்லை. 


அந்த சாதனைக்கு சொந்தக்காரராக ஆகும் வாய்ப்பு ஷிகர் தவானுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒயிட்வாஷ் சம்பவம் நடந்தால் அது இந்திய அணியின் 13வது ஒயிட்வாஷ் நிகழ்வாக இருக்கலாம். அயல்நாட்டு மண்ணில் 5வது ஒயிட்வாஷாக அமையும். ஏற்கனவே ஜிம்பாப்வே மண்ணில் 2013 ஆம் ஆண்டு விராட் கோலி, 2015ஆம் ஆண்டு ரஹானே, 2016 ஆம் ஆண்டு தோனி , இலங்கை மண்ணில் 2017 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி  ஒயிட் வாஷ் செய்துள்ளது. 


அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் சொந்த மண்ணில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்திருந்தது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்த வெற்றி நிகழ்ந்தால் ஒரே வருடத்தில் ஒரே அணிக்கு எதிராக 2 ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்த 3 அணி என்ற பெருமை இந்திய அணிக்கு கிடைக்கும் என்பதால் ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண