மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஆட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை பயணப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.


இதில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி இலங்கையை அணியை தோற்கடித்தது. ஹர்மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கை மகளிர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினர். ரேணுகா சிங் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர், வெள்ளிக்கிழமை இலங்கை பல்லேகலே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 171 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஸ்மிருதி மந்தனா மற்றும் யாஸ்திகா பாட்டியா ஆகியோர் இந்திய அணி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டனர். ஆனால் ஹர்மன்ப்ரீத் மற்றும் ஷஃபாலி வர்மா நின்று ஆடினார்கள்.






ஷஃபாலி வர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, ஹர்மன்ப்ரீத் மற்றும் ஹர்லீன் தியோல் விளையாடினர். அவர்கள் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் இருந்த சமயம் இந்திய கேப்டன் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஹர்லீன் தியோல் மற்றும் ரிச்சா கோஷ் அடுத்தடுத்து வீழ்ந்தனர், ஆனால் தீப்தி சர்மா 22 ரன்களுக்கும் மற்றும் பூஜா வஸ்த்ரகர் 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்காமல் இருந்து போட்டியை இந்தியாவுக்காக வென்று கொடுத்தனர். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார்.


முன்னதாக. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில், ரேணுகா சிங் மற்றும் தீப்தி ஷர்மா இருவரும் இலங்கையின் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த, இந்தியா ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியது. விரைவில், ஹர்மன்பிரீத் கவுரும் பந்து வீச, இலங்கை 23 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது  என்பது குறிப்பிடத்தக்கது.