IND W vs BAN W 1st T20: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 


வங்காளதேசம் - இந்தியா:


வங்கதேச டாகாவில் உள்ள ஸ்ரீ பங்களா நேஷ்னல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி நிதானமாக ஆடத் தொடங்கியது. முதல் விக்கெட்டினை 27 ரன்களில் இழந்தது. பேட்டிங்கிற்கு சவாலான மைதானத்தில் பொருமையாக ரன்கள் சேர்த்த வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில், மின்னு மனி, ஷஃபாலி வர்மா, பூஜா ஆகியோர் தல ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


அதன் பின்னர், களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழக்க, இந்திய அணிக்கு சரிவாக கருதப்பட்டது. அதன் பின்னர் வந்த இந்திய அணியின் ஜெமிமா மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனவுடன் இணைந்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ரன்கள் சேர்த்தனர்.


ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி:


அதிரடியாக ஆடிய ஜெமிமா தனது விக்கெட்டை இழந்த பின்னர், வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். குறிப்பாக 34 பந்துகளை சந்தித்த ஹர்மன்ப்ரீத் 2 சிக்ஸர் 6 பவுண்டரி என வங்கதேசத்துக்கு சவாலான நிலையை உருவாக்கியதுடன், மிகச்சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார். 16. 2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.