அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்று வரலாறு படைத்தது ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி. 


இதனை தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்தநிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று  இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கு மோதுகிறது. 


2023 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பிறகு இரு அணிகளும் டி20 வடிவத்தில் சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதில், ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது. 


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


இரு அணிகளும் இதுவரை டி20 வடிவத்தில் 31 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 23 முறையும், இந்திய அணி 7 முறையும் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போயுள்ளது. 


டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி பிட்ச் எப்படி..?


டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி பிட்ச் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. இதனால், இரு அணிகளும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


போட்டியில் மழைக்கு வாய்ப்பா..? 


இரு அணிகளும் இன்றைய போட்டியில் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. ஈரப்பதம் அளவு 49% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மணிக்கு 13 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் போட்டியில் எந்தவிதமாக தோய்வும் ஏற்படாது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


இந்திய பெண்கள்: ஸ்மிருதி மந்தனா , ஷஃபாலி வர்மா, ஜெம்மிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், டைட்டாஸ் சாது, சைகா இஷாக், ரேணுகா சிங்


ஆஸ்திரேலியா பெண்கள்: பெத் மூனி (விக்கெட் கீப்பர்), கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதர்லேண்ட், அலிசா ஹீலி (கேப்டன்), எலிஸ் பெர்ரி, ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஜார்ஜியா வேர்ஹாம், மேகன் ஷட், ஆஷ்லே கிங்.


IND W vs AUS W 1st T20I எந்த டிவி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும்?

ஸ்போர்ட்ஸ் 18 - 1 (எஸ்டி + எச்டி) மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 - 2 இந்தியாவில் இந்தியா பெண்கள் vs ஆஸ்திரேலியா பெண்கள் முதல் டி20 ஐ நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல், மொபைல் யூசர்கள் ஜியோசினிமா ஆப்பில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

முழு அணி விவரம்: 


இந்திய மகளிர் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), கனிகா அஹுஜா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சைகா இஷாக், மன்னத் காஷ்யப், அமன்ஜோத் கவுர், மின்னு மணி, ஸ்ரேயங்கா பாட்டீல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், டைட்டாஸ் சாது, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், பூஜா வஸ்த்ரகர், ஷஃபாலி வர்மா 

 

ஆஸ்திரேலியா பெண்கள் அணி: அலிசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தஹ்லியா மெக்ராத் (துணை கேப்டன்), டார்சி பிரவுன், ஹீதர் கிரஹாம், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷூட் , அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம்