இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல டெஸ்ட் கிரிக்கெட்டில் சொல்லுபடியாக எந்தவொரு இன்னிங்ஸையும் வெளிப்படுத்தவில்லை. இந்தநிலையில், இந்திய நேரப்படி இரவு 7. 30 மணிக்கு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் டெஸ்ட் போட்டியில் சந்திக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மோசமான பார்மால் 50 என்ற சராசரியை கொண்டிருந்த கோலி, 48 ஆக குறைத்து கொண்டார். கோலிக்கு இந்த மாதிரியான சில விஷயங்கள் பின்னடைவை தந்தாலும், இந்த டெஸ்ட் தொடரில் சில பெரிய சாதனைகளை படைத்து கோலி சரித்திரம் படைக்க இருக்கிறார்.
கோலி படைக்கவிருக்கும் சாதனைகள்:
வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸிலும் 150 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் 5-வது இடத்தை பிடிப்பார். கோலி இதுவரை ஒட்டுமொத்தமாக 25,385 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார். அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் ஜாக் காலிஸ் 25,534 ரன்களுடன் தற்போது 5வது இடத்தில் உள்ளார்.
மேலும், 25 ரன்கள் எடுத்தால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 5வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைப்பார். டெஸ்டில் 8500 ரன்களை கடந்த கோலிக்கு இன்னும் 21 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி இன்னும் 13 பவுண்டரிகளை அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 500 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சிறப்பை பெறுவார்.
டான் பிராட்மேன் சாதனை முறியடிப்பு:
விராட் கோலி டெஸ்ட் வடிவத்தில் 28 சதங்கள் அடித்துள்ளார். மேலும் இன்னும் ஒரு டெஸ்ட் சதம் அடித்தால், சர் டான் பிராட்மேனின் சதங்களை சமன் செய்வார். இதன்மூலம் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 10வது இடத்தை ஆக்கிரமிப்பு செய்வார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ரஹ்கீம் கார்ன்வால், ஜேசன் ஹோல்டர், ரேமன் ரெய்பர், கிர்க் மெக்கென்சி, கெமர் ரோச், ஷான் வார்ரிக் ஜோசப், ஜோன் வார்ரிக் ஜோசப் , ஜோன் வார்ரிக் ஜோசப்
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில் , விராட் கோலி , யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே , ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், நவ்தீப் குமார் சைனி, முகேஷ் குமார் சைனி, , முகமது சிராஜ், ஜெய்தேவ் உனட்கட்