இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிக்ள் மோதிய முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி, ரிஷப் பண்ட் தவிர பேட்டிங் செய்த அனைவரும் சிறப்பாக ஆடினர்.


இந்திய அணி கடைசி கட்டத்தில் தடுமாறியபோது சூர்யகுமார் யாதவும், வெங்கடேஷ் அய்யரும் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றி பெறவைத்தனர். இந்த நிலையில், இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யரை ஆடும் லெவனில் எடுக்காதது பற்றி ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.




“ ஸ்ரேயாஸ் அய்யரை ஆடும் லெவனில் எடுக்க முடியாதது மிகவும் கடினமாக இருந்தது. ஆடும் லெவனில் மிடில் ஆர்டரில் யாராவது பந்துவீச வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது. அதன் காரணமாகவே நாங்கள் அவரை ஆடும் லெவனில் எடுக்கவில்லை. இந்த மாதிரி போட்டிகள் இருப்பது எப்போதும் நன்றாகவே இருக்கும். வீரர்கள் கிடைக்காமல், பார்மில் இல்லாமல் இருப்பதை விட இந்த மாதிரியான சவால்களை கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


ஸ்ரேயாஸ் அய்யர் உலககோப்பைக்கு ஆட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம். அனைத்து வீரர்களும் தொழில்முறை வீரர்கள். அவர்களுக்கு அணிதான் முதலில் வரவேண்டும் என்பதை புரிந்துகொண்டுள்ளனர் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சில சமயங்களில் ஆட்டத்தை தவறவிட்ட வீரர்களுக்கு இது கடினமானதாக இருக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடும்போது நான் நீண்ட நாட்களாக இஷான் கிஷான் மிடில் ஆர்டரில் ஆடும்போது அவரிடம் பேசியுள்ளேன். அது அவருடைய இயல்பான நிலை அல்ல. ஆனால், நாங்கள் அணிக்கு முதலிடம் கொடுக்க விரும்புகிறோம். “


இவ்வாறு அவர் கூறினார்.




கடந்த சில தினங்களுக்கு முன்பு விராட்கோலியின் பார்ம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு ரோகித் சர்மா கோபப்பட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் அய்யரை ரூபாய் 12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த அணியின் கேப்டனாகவும் ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண