வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி,தொடரையும் கைப்பற்றியது.


வருகின்ற பிப்ரவரி 16, 2022 முதல் கொல்கத்தாவில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து துணை கேப்டன் கே.எல்.ராகுல் விலகினார். முன்னதாக, கடந்த பிப்ரவரி 9, 2022 அன்று நடந்த 2 வது ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின் போது ராகுலுக்கு மேல் இடது தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இந்தநிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளுக்கு துணை கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), பிப்ரவரி 14, 2022 அன்று வெளியிட்ட அறிக்கையில், வெஸ்ட் இண்டீஸ் எதிரான மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய டி20ஐ அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 


வாஷிங்டன் சுந்தர் விலகல் : 


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) அதிகாரி ஒருவர் சுந்தருக்கு கிரேடு 1 தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மூன்று வாரங்களுக்குள் NCA இல் தகுதி பெற வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.


மேலும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இடது கை சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை பிசிசிஐ நியமித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


டி20 போட்டிகளுக்கான இந்திய அணி : 


ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்) (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ்


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண