ஜூலை 12 முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியானது டொமினிகாவில் நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டொமினிகாவில் இந்திய அணி கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் தற்போதைய இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருந்தார். அந்த போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டியில், விராட் கோலி ஒரு இன்னிங்ஸில் 30 ரன்கள் எடுத்திருந்தார். முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 34 ரன்களும் எடுத்திருந்தார். 


இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய 322 ரன்கள் எடுத்தது. பின்னர் நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. 


கடைசியாக 2002ல் டெஸ்ட் தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்..!


வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2002ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரை வென்றது. அதன்பிறகு, இரு அணிகளும் இடையே 8 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளது. இதில், ஒவ்வொரு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றது. 


நேருக்குநேர்: 


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே 98 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 22 முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 30 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்திய அணியை விட வெற்றி அடிப்படையில் முன்னிலை வகித்து வருகிறது. 


வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: 


ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:


கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சார்ரி ஜோசப், கிர்க் மெக்மார்க்மன் ரெசிபர், கிர்க் மெக்மர் ரோச், ஜோமெல் வாரிக்கன்.