இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நேற்று நடைபெற்றது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஆடவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையும் ஹர்திக் பாண்ட்யா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஓடீன் ஸ்மித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 189 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 






190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அடியாக அமைந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ஹோல்டரை அக்சார் பட்டேல் கோல்டன் டக்கில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் ஷமர் ப்ரூக்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். 






தொடர்ந்து, டெவோன் தாமஸ் 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர் மட்டும் அரைசதம் கடந்து 56 ரன்களில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கேப்டன் பூரன் 3 ரன்களில் வெளியேற, அதன் தொடர்ச்சியாக களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு எண்களுடன் சுருண்டனர். 


15. 4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 4 விக்கெட்களும், அக்சார் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.


ஆட்ட நாயகனாக அக்சார் பட்டேலும், தொடர் ஆட்ட நாயகனாக அர்ஷுப்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண