IND Vs WI, 5th T20 LIVE: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி..!
IND Vs WI 5th T20 Live Updates: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி டி20 போட்டியின் லைவ் அப்டேட்ஸ்களை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
இறுதியில் வெ.இண்டீஸ் அணி போட்டியை 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, போட்டியோடு தொடரையும் 3-2 என்ற கணக்கில் வென்றது. இறுதி வரை களத்தில் இருந்த பிரண்டன் கிங் 55 பந்தில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி 85 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சிறப்பாக ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 107 ரன்கள் சேர்ந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்துள்ளது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது.
சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை ஹோல்டர் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
17வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ஹர்திக் அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா கடைசி 4 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மழை நின்றதால் போட்டி தொடங்கியது.
15.5 ஓவர்கள் முடிந்த நிலையில் போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.
போட்டி நடைபெற்று வரும் சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் தூரல் மழை தொடங்கியுள்ளது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் சேர்த்துள்ளது.
4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் இந்திய அணி 13.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கியுள்ளார்.
சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டு, அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியது.
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது.
5.5 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வரும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சிறப்பாக ஆடி வருகிறது.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்த் 32 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஜோடி தேவையில்லாமல் தங்களது விக்கெட்டுகளை முக்கியமான போட்டியில் இழந்து வெளியேறினர்.
இந்திய அணியின் திலக் வர்மா களமிறங்கியுள்ளார்.
இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
முதல் விக்கெட்டை இழந்துள்ள இந்திய அணியின் சார்பில் அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தேவையில்லாத ஷாட்டினால், போட்டியின் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதி டி20 போட்டி தொடங்கியது.
Background
இந்தியா - மேற்கிந்தியா தீவுகள் இடையேயான டி-20 தொடரை தீர்மானிக்கும் 5வது போட்டி இன்று நடைபெற உள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்:
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றது. இருப்பினும் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும், அடுத்தடுத்து வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
5வது டி-20 போட்டி:
இந்நிலையில் தான், தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்த போட்டியில் வென்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிரான ஒரு தொடரை கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி இன்றைய போட்டியிலும் வென்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக தோல்வியே சந்தித்ததில்லை என்ற வரலாற்றை தொடர தீவிரம் காட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நிலவரம்:
இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும், கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துள்ளது. அந்த நம்பிக்கையுடன் இன்றைய போட்டியிலும் களமிறங்க உள்ளது. முதல் இரண்டு போட்டிகளின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணமாக இருந்தாலும், அந்த தவறுகளை இந்திய அணி திருத்தி வெற்றிகளை குவித்து வருகிறது. கில், ஜெய்ஷ்வால், திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.
அதேநேரம், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். அதோடு, அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விக்கெட் வேட்டையை நடத்தி வருகின்றனர். மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டால் இன்றய போட்டியில் வென்று, இந்திய அணி தொடரை கைப்பற்றுவது உறுதி. அதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று விதமான தொடர்களையும் கைப்பற்றி, இந்திய அணி இந்த மொத்த சுற்றுப்பயணத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -